திண்டுக்கல் பிஆர்ஓ கையாடல் *போட்டோகிராபர் போட்ட குண்டு

 திண்டுக்கல் செய்தி:



 


திண்டுக்கல் பிஆர்ஓ கையாடல் *போட்டோகிராபர் போட்ட  குண்டு


திண்டுக்கல்:


 திண்டுக்கல் பிஆர்ஓ போலி பில் எழுதிய கையாடல் செய்ததாக போட்டோகிராபர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார். இது பிஆர்ஓ அலுவலகத்தை கலங்கடிக்க செய்துள்ளது.

திண்டுக்கல் பி ஆர் ஓ வாக இருப்பவர் வத்தலகுண்டை சேர்ந்த சீனிவாசன். இவரும் கணக்கர் செல்வநாயகியும் இணைந்து போட்டோகிராபருக்கு தெரியாமல் போலி பில் களை தயாரித்து பொருட்கள்,  போட்டோ எடுக்கும் கருவிக்கு உதிரிபாகங்கள் வாங்கியதாக கணக்கு காட்டி உள்ளனர். மேலும் பல விதமான ஊழல்கள் செய்து வருவதாக திண்டுக்கல் பிஆர் அலுவலகத்தில் போட்டோகிராபராக இருக்கும் ஈஸ்வரன் செய்தித்துறை இயக்குனர் மற்றும் செயலாளர் முதலமைச்சர் தனி பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். கடந்த மூன்று மாதமாக எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் மதுரை ஹைகோர்ட்டில் போட்டோகிராபர் ஈஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் பொருட்கள் வாங்காமலே போலி பில் தயாரித்து அரசு பணத்தை கையாடல் செய்ததாக விளக்கியிருந்தார். இந்த மனுவை மதுரை ஹைகோர்ட் வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து போட்டோகிராபர் ஈஸ்வரன் கூறியதாவது:

அரசு விதிமுறைகளை மீறி பிஆர்ஓவும் கணக்காளரும் செயல்பட்டு வருகின்றார்கள். மாதந்தோறும் நிருபர்களுக்கு செலவழித்ததாக பல லட்சத்தை கையாடல் செய்கின்றனர். எனக்கு தெரியாமல் இவர்களாகவே பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டி மோசடி செய்துள்ளனர். இதற்கு ஒரு கணக்கு நோட்டும் பராமரிக்கப்படுகிறது. என்னுடைய கொரோனா சான்றிதழை தூக்கி எறிந்து விட்டு, நாடகம் ஆடுகின்றனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறேன். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும், என்றார்.


#pothigaitimes

#Tamilnadu

#Today

#Tamil

#trending

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?