வாகனங்கள் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஏன்?
வாகனங்கள் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஏன்?
தற்போது வாகன உற்பத்தி துறையில் அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் தொழில் போட்டியுடன் புதிய புதிய வாகனங்களை அதிகபட்ச சிறப்பம்சங்களுடன் சந்தையில் களம் இறக்கி வருகின்றன.
இவ்வாறு சந்தையில் கனம் எடுக்கப்பட்டு வரும் வாகனங்கள் பலவித புதிய சிறப்பு தொழில்நுட்பங்கள் சிறப்பம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. இதனால் அவற்றின் விலை அதிகரிக்கிறது. மேலும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் கூடுதலாக இருக்கும்போது அவற்றை சரியாக பராமரிக்க வேண்டிய பராமரிப்புச் செலவுகளும் கூடுகின்றது. அது மட்டுமல்லாது தற்போது வரும் புதிய வாகனங்களில் சிறிய சிறிய உதிரிபாகங்கள் கூட ஒரு செட்டாகவே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 1980 களில் தயாரிக்கப்பட்ட டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனங்களில் பிரேக் கேபிள்கள் உள்ளே வரும் பிரேக் கேபிள் கம்பி மட்டுமே தனியாக உதிரிபாகமாக கிடைக்கும் அதன் விலை அதிகபட்சம் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய்க்குள் இருக்கும். ஆனால் தற்போது வரும் எக்ஸெல் வாகனங்களுக்கு பிரேக் கேபிள் கிட்டுகள் செட் ஆகவே வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது இதனால் விலை அதிகரிக்கிறது. அதேபோல் பிரேக் ஷூ போன்ற உதிரி பாகங்களின் ஆயுட்காலமும் பழைய வண்டிகளில் வாகனங்களில் இருந்தது போன்று தற்போது இருப்பதில்லை. தற்போதைய வாகனங்களில் அடிக்கடி வாகனத்தை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாகனத்தின் பராமரிப்பு செலவுக்காகவே ஒவ்வொரு மாதம் ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது வரும் புதிய வாகனங்களில் இருசக்கர வாகனங்களில் கூட ஜிபிஎஸ் ட்ராக்கிங் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஜிபிஎஸ் நேவிகேஷன் போன்ற பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இல்லை என்றாலும் அந்த வாகனங்களை பயன்படுத்துவோர் தங்கள் தொலைபேசி மூலமாகவே ஜிபிஎஸ் நேவிகேஷன் போன்ற சேவைகளை எல்லாம் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் பலர் இதில் கொடுக்கப்பட்டுள்ள பல வசதிகளை பயன்படுத்துவதும் இல்லை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தாத நிலையில் இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வாகனத்தில் இணைக்கப்பட்டு அதன் மூலம் செயற்கையாக வாகனத்தின் விலைகளை நிறுவனங்கள் உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிக விலைக்கு வாகனங்களை வாங்க தூண்டுகிறது.
பொதுவாக வாகனங்களை பொருத்தவரை நாம் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வருவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். எனவே அவற்றில் எந்த வசதிகள் எல்லாம் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்பதையும் எது நமக்கு மிகவும் அவசியமானது என்பதையும் முன்கூட்டியே யோசித்து வைத்துக்கொண்டு அந்த வசதிகள் மட்டும் உள்ள வாகனங்களை வாங்கினால் உங்களுக்கு வாகனத்தின் விலையும் குறையும் மற்றும் பராமரிப்பு செலவும் குறையும்.

Comments
Post a Comment