திமுக அரசால் வீணடிக்கப்படும் மக்கள் பணம்
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்காக வெள்ளலூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன இதில் கிட்டத்தட்ட 80 சதவீத பணிகளுக்கு மேல் நடந்து முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது திமுக அரசு அந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு மாற்றப் போவதாக அறிவித்து அதற்கான தேர்வு செய்யப்பட்ட பணிகள் தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு செய்யப்பட்ட அனைத்து பணிகளும் பயனில்லாமல் போவதால் அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில் இது போன்ற தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதை விட்டுவிட்டு திமுக அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
#pothigaitimes #Coimbatore #Busstand #News #Today #Tamil #Trending
.jpeg)
Comments
Post a Comment