தமிழக அரசு பேருந்து அவல நிலை
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அரசு பேருந்துகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பேருந்துகள் பராமரிப்பின்றியும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இல்லை.
திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை அளித்ததனால் அவர் பதவியேற்றதும் உடனடியாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் இது போன்ற இலவச அறிவிப்புகள் போக்குவரத்து கழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டது இதனால் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் மக்களின் உயிருக்கே உத்திரவாதம் இல்லாததாக இருக்கிறது.
பேருந்துகளை பராமரிக்கவும் புதிய பேருந்துகள் வாங்கவும் போக்குவரத்து கழகத்திற்கு நிதி இல்லாததால் காலாவதியான பேருந்துகளும் ஓட்டை உடைசல் ஆன கருத்துக்களுமே இயக்கப்பட்டு வருகின்றன.
திரு ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் துணை முதலமைச்சராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு தமிழக அரசு நிதி நிலையில் போக்குவரத்து கழகங்களின் நிதி நிலையும் நன்றாக தெரியும்.
இருந்தும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தேவையில்லாத இலவசத் திட்டங்களையும் வெற்று அறிவிப்புகளையும் பல பொய் வாக்குறுதிகளையும் நீட் போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்து தற்போது தமிழக மக்களையும் போக்குவரத்துக் கழகங்களையும் இது போன்ற ஒரு அவலை நிலைக்கு தள்ளியுள்ளார் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
#Pothigaitimes #TNSTC #Dravidamodel #News #Today #Trending #Vairal #Videos
Comments
Post a Comment