கோவில் நில விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் நகர்மன்ற தலைவர்

 அறநிலையத்துறை நிலத்தை கோயில்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், கோயில் பயன்பாடு தவிர பிற தேவைகளுக்கு பயன் படுத்த கூடாது என மாண்பமை உயர்நீதி  மன்றம் பலமுறை தீர்ப்பளித்த போதிலும் கடையநல்லூரில் பிறதான பகுதியில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான சத்திரமடை நிலத்தை கேட்டு பெற கடந்த வாரம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நகர்மன்ற தலைவரே கொண்டு வந்தார். சட்டத்திற்கு புறம்பாக உள்நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இத்தீர்மானத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரவே தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக நகர்மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.

ஆனால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தில் மாற்றம்  செய்ய வேண்டும் என்றாலோ, ரத்து செய்ய வேண்டுமென்றாலோ இதற்க்கென தனியாக சிறப்பு நகர்மன்ற கூட்டம் நடத்தி தீர்மானத்தை ரத்து செய்யவேண்டுமென தமிழக நகராட்சி விதிகள் கூறுகிறது. எனவே சிறப்பு நகர்மன்ற கூட்டம் நடத்தி இத்தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

இனி வருங் காலங்களிலாவது நகர்மன்ற தலைவர் இது போன்ற தீர்மானம் கொண்டும் வரும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மாதிரி படம்

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?