அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்
அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்
தற்போது தொழில் நுட்ப புரட்சி காரணமாக நமது இந்தியாவில் டிஜிட்டல் எக்கனாமி வழியாக பணப்பரிவினைகள் நடைபெற நமது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
இதனால் பணம் கையில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் இல்லை. திருட்டு பயமும் இல்லை. சில்லறை தொல்லைகள் இல்லை. எங்கிருந்தும் யாருக்கும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எளிதாக பொருட்களை வாங்கிக் கொண்டு அனுப்ப வசதியாக உள்ளது.
இதனால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக உள்ளது.
இதன்மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் வாங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால் எல்லா வரவு செலவுகளும் வருமான வரித்துறை கண்காணிக்க ஏதுவாக உள்ளது.
தற்போது சரியாக வியாபார கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வியாபாரிகளுக்கு வருமானவரித்துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகள் வெளியில் வந்துவிடும் என்பதால் தற்போது யுபிஐ வழியாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை புறக்கணிக்கும் பொழுது நாம் வாங்கும் பொருட்களை கையில் பணம் கொடுத்து வாங்க நேரிடும். அதுபோல் நாம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் பொழுது அந்த குறிப்பிட்ட வியாபாரிகள் அதனை அரசுக்கும் வருமானவரித்துரைக்கும் கணக்கு காண்பிக்காமல் கருப்பு பணமாக மாற்றி வைத்துக் கொள்வார்கள். இதனால் அரசுக்கும் வருமானவரித்துறைக்கும் இழப்பு ஏற்படும். அதனால் அரசால் நமக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய போதிய வருவாய் கிடைக்காது. இது நம்மைப் போன்ற சாமானிய மக்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே நாம் எந்த பொருட்களை வாங்கினாலும் எந்த கடைகளில் எல்லாம் யூ பி ஐ பணப் பரிவர்த்தனை வசதிகள் கிடையாது என்று வாசகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றதோ அல்லது சொல்லப்படுகிறதோ அதுபோன்ற கடைகளில் வாங்காமல் மற்ற கடைகளில் நாம் வாங்கும் பொழுது நம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். இது நம் ஒவ்வொருவரின் கடமையாக கருதி நாம் செய்தால் பிற்காலத்தில் அது நாட்டிற்கு நல்ல வளர்ச்சி கொடுப்பதோடு நமக்கும் நல்ல சாலை வசதி குடிநீர் இணைப்புகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற பல அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வசதியாக இருக்கும்.
நீங்கள் யூ பி ஐ பணப்பரிவர்த்தனையை உபயோகிக்காமல் இருந்தாலும் அந்த வசதி இல்லாத கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று மக்கள் நலன் கருதி கேட்டுக்கொள்கிறோம்.
.jpeg)

.jpeg)
Comments
Post a Comment