நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா
நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா
சமீபத்தில் தமிழகத்தில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதுபற்ற விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பிரிவின் செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பின்னர் அதை நீக்கி இருக்கிறார். அப்பதிவில் அவர் நேபாளத்தை போன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளைப் போன்று கிளர்ச்சியில் ஈடுபட ஜென்சி தலைமுறை தூண்டிவிடும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். பின்னர் யாருடைய அறிவுறுத்தலின் பேரிலோ அதனை நீக்கி இருக்கிறார். ஆனாலும் சமூக வலை தலைவாசிகள் அனைவரும் இதைப் பற்றி பேசி அந்த கருத்து பதிவிட்ட ஆக அர்ஜுனாவின் பக்கத்தை ஆதாரமாக காட்டி விவாதித்து வருகின்றனர். ஆதார் அர்ஜுனாவின் இந்த செயல் தேசத்துக்கு எதிரானதாகவும் நக்சல் பின் தொடர்வதாகவும் உள்ளது. இது தேசத்துக்கு எதிரான செயலாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை தவறாக வழி நடத்தும் முறையாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது போன்ற பதிவிட்டு ஆதார் அர்ஜுனா அவர்களை மத்திய அரசு தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. ஆனால் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவத்தில் பாரதியார் ஜனதா கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு ஆதாயம் பெருவழியில் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிடுவது வருங்கால சந்ததியினர் தலைவர் தவறாக வழி நடத்துவதற்கு வழிவகுக்கும். எனவே மத்திய அரசு இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்ட திரு ஆதவ் அர்ஜுனா அவர்களை உடனே கைது செய்யுவது நல்லது என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

.jpeg)
Comments
Post a Comment