நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா?

 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா?



தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நமது முதலமைச்சர் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பகுதியிலும் அரசு மருத்துவர்கள் கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர். 

அப்படி மக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை ஸ்கேன் சோதனை போன்ற பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அதற்கான பதிவுகள் செய்யும்பொழுது பயனாளிகளின் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டன.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று பல நாட்கள் கடந்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் (Result) தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்கள் பரிசோதனைகள் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எதுவும் வராத பட்சத்தில் அவை கண்துடைப்பாக இருக்குமோ என்று மக்கள் பலரும் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அரசியல் நோக்கர்கள் பலரும் ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் மற்றும் பிரைமரி ஹெல்த் சென்டர் மற்றும் இல்லம் தேடி மருத்துவம் போன்ற பல திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தபட்டு வரும் நிலையில் இந்த நலம் காக்கும் ஸ்டாலின்  என்ற திட்டம் வெறும் கண்துடைப்பு என்பது போல அரசியல் பார்வையாளர்களின் கருத்தும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற திட்டங்களால் அரசின் பணம் மிகப்பெரிய அளவில் வீணடிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகளும் நிலவுகிறது.



தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி ஸ்டாலின் அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் மற்றும் தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் போன்ற  அனைத்து நிகழ்வுகளுமே தோல்வியில் முடிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?