ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய பாதை

 


நமது இந்திய நாட்டில் உள்ள குறிப்பிடத் தகுந்த பெரிய நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் ஆகும்.

 இந்நிறுவனம் ஆயில் சுத்திகரிப்பு தொலைத்தொடர்பு நிதி மேலாண்மை நிறுவனம் மற்றும் நுகர் பொருள் வணிகத் துறையிலும் ஈடுபட்டு வருகிறது.

 இந்நிறுவனத்தின் பெரும் பகுதி வருவாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் இருந்து வருகிறது. தற்போது உலக அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் நிலையில் வரும் காலங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு என்பது பெரிய அளவில் ஆர்வம் அளிக்கும் தொழிலாக இருக்காது என்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றுப் பாதையில் செல்ல முடிவெடுத்தாக கூறப்படுகிறது.

 இதனால் அந் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் நுகர் பொருள் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்து சந்தையில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் காய் நகர்த்தி வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

 ரிலையன்ஸ் நிறுவனம் நுகர் பொருள் துறையில் உள்ள சிறிய நிறுவனங்களை வாங்கி தங்கள் சந்தை பங்களிப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளரிடம் நேரடியாக விற்பனை செய்யும் சில்லறை விற்பனை கடைகளும் அதிகம் உள்ளதாலும் அதனை மேலும் விரிவு படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் தயாரிப்பது முதல் நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்பனை செய்வது வரை அனைத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலமே நடைபெறுவதால் மற்ற போட்டி நிறுவனங்களை விட இவர்களுக்கு விற்பனை அதிகப்படுத்தவும் மேலும் கூடுதல் லாபம் பெறவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



 இதனால் நுகர்பொருள் துறையில் போட்டி நிறுவனங்களை விட ரிலையன்ஸ் இன் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.

 இன்னும் சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பை விட நுகர் பொருள் துறையில் அதிக லாபம் ஏற்றும் நிறுவனமாக மாற வாய்ப்பு உள்ளது.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?