போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?


 போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?



தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனியார் பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்ந்து பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அறிந்தோ, அறியாமலோ அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கலவரம் நடக்கும் சமயத்தில் அங்கு இருந்ததாலும் அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து கலவரங்களில் ஈடுபட்டதாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் தன் எழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டு பல நாட்கள் தொடர்ந்து வந்த நிலையில் சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து இறுதியில் அதை கலவரமாக மாற்றினர். அதேபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்திலும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராடிய போது சில சமூக விரோத கும்பல்களின் அராஜகத்தால் பெரும் கலவரமாக மாறி துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. தற்போது கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு எதிரான போராட்டமும் நீதிமன்றம் கூறியபடி திட்டமிட்டு கலவரமாக மாற்றப்பட்டுள்ளது.


இதனால் சாமானிய பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் தன் எழுச்சியாகவோ அல்லது சிலரின் ஏற்பாட்டாலோ முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் என்பது எந்த நேரத்திலும் சில சமூக விரோத கும்பல்களோ அல்லது சில அரசியல் சக்திகளோ எப்போது வேண்டுமானாலும் அங்கு திட்டமிட்டு சில வன்முறைகளை அரங்கேற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது. இவை சிலரின் சுயநலத்துக்காகவும் சில நேரங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் சிலர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்லது அரசியல் காரணங்களுக்காக என எதற்காக வேண்டுமானாலும் கலவரங்கள் தூண்டி விடப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நாம் நல்ல நோக்கத்திற்காக போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்றிருந்தாலும் போராட்டம் கலவரமாக வெடிக்கும் நிலையில் நாம் அங்கு இருப்பது என்பது நமக்கு ஆபத்தாகவும் பிரச்சனையாகவும் சென்று முடிய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாது நம் உடமைகள் அல்லது வாகனங்கள் சேதப்படுத்தப்படவும் நமது உயிருக்கே ஆபத்து விளைவிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே இதனை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.


மேலும் இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் போன்ற சிறுவர்களும் வாலிபர்களும் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கை முறையே திசை திரும்ப வாய்ப்பு உள்ளது. காரணம் போராட்டத்தின் போது அவங்க அவர்கள் அங்கிருந்து இருந்தாலும் அல்லது போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டிருந்தாலோ தற்போது உள்ள சூழ்நிலையில் பலரும் தங்கள் தொலைபேசி கேமராக்களில் அந்த சம்பவங்களை பதிவிட அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது. மேலும் பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் கலவரங்களை படம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் கலவரம் நடைபெற்ற போது அப்பகுதியில் இருந்தவர்கள் யார்? கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்று விவரங்கள் எளிதாக தெரிய வந்துவிடும். அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டவர்களையும் அந்த சமயத்தில் அங்கு இருந்தவர்களையும் போலீசார் பிடித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்தால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக அதிக வாய்ப்பு உள்ளது.


இதனால் இனி பொதுமக்கள் எந்த போராட்டம் என்றாலும் யாரால் நடத்தப்படுகிறது எதற்காக நடத்தப்படுகிறது இதன் பின்புறத்தில் யார் யார் இருக்கிறார்கள் இதனால் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதால் நமக்கு ஏதேனும் பாதிப்பு வருமா? என்பதை அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டு பின்னர் போராட்டங்களில் ஈடுபடுவது நல்லது. இல்லை என்றால் தேவையில்லாத பிரச்சினைகளை சிக்கி உங்கள் வாழ்க்கை திசை திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?