Posts

லஞ்சம்: கணவன் மனைவி கைது

Image
  லஞ்சம்: கணவன் மனைவி கைது ♦️கோவை வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அபினேஷ் என்பவர் தனது நிறுவனம் சார்பில் அதிகமாக செலுத்திய உள்ளீட்டு வரியை (Input Tax) திரும்பப் பெற விண்ணப்பித்தார். ஆனால் அந்த வேலையை முடித்துத்தர ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் என மகேஸ்வரி கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ரூ. 60,000 தருவதாக ஒப்புக்கொண்டார்.  ♦️எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனப் பொடி தடவிய பணத்துடன் அபினேஷ் சென்றார். உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் என்பவரின் மொபைல் எண்ணை கொடுத்து லஞ்சப் பணம் ரூ. 60,000-ஐ அவரிடம் கொடுக்கும்படி தெரிவித்தார். அபினேஷ் அழைத்த போது கொடிசியா மைதானம் அருகில் இருப்பதாகக் கூறிய தனசேகரன் அங்கு வருமாறு தெரிவித்தார்.  ♦️தனசேகரன் இருந்த இடத்திற்குச் சென்ற அபினேஷ் காரில் ஏறி அமர்ந்து பணத்தைக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தனசேகரனை பிடித்தனர். விசாரணையில் அவர் வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரிய...

இன்றைய17/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் பலி

Image
  விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் (தொப்பலாக்கரை கானா விலக்கு அருகே )இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரும் - காரும் - ஒரு இருசக்கர வாகனமும் மோதி விபத்து.😭😭 தந்தை மகன் என இருவர் பலி. சிலர் படுகாயம். 😭😭 சிவராத்திரி வழிபாடு காரணமாக அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு செய்ய சென்று திரும்புவது தெரிகிறது. அதன் காரணமாக அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது.  நண்பர்களே... குறிப்பாக இரவு முழுவதும் தூங்காத வாகன ஓட்டிகள் கவனம். சிறிதாக தூக்கம் வந்தாலும் கூட கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து பின்னர் வாகனத்தை  ஓட்டவும்.🙏👍

தோவாளை பகுதியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து

Image
  கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை நான்கு வழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இறந்தவர்கள் அடையாளம் தெரிந்தது. திருநெல்வேலி மாவட்டம்வடக்கன்குளம் அருகே உள்ள கோலியான் குளத்தை சேர்ந்ததாய் கலா, அவரது மகன் ஆகியோர் விபத்தில் பலியானவர்கள். காயமடைந்த ஆட்டோ டிரைவர் அவரது இன்னொரு மகனாவார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.அவரது மகன்கள் இருவருடன் ஆட்டோவில் சென்று போது விபத்தில் சிக்கியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் திரு பச்சைமால் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

இன்றைய16/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

மலப்புரம் மாவட்டத்தில் சுற்றிய போதை பொருள் கடத்தல் கும்பல்

Image
  மலப்புறத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: கோடிகள் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ உடன் தம்பதியர் உட்பட மூவர் கைது! மலப்புறம் மாவட்டத்தை அதிரவைத்த இன்னொரு பெரிய போதைப்பொருள் பறிமுதல். University of Calicut அருகே உள்ள ஒரு வீட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டதாக கூறப்படும் போதைப்பொருள் சங்கிலியை போலீசார் சிதைத்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 1.16 கிலோ எம்.டி.எம்.ஏ மற்றும் ஆவணமற்ற 21 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. 53 வயதான அசீஸ், அவரது மனைவி 50 வயதான கமருன்னீசா, அசீஸின் மகன் ஜாசிரின் நண்பர் சலாவுத்தீன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அசீஸின் மகன் ஜாசிர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் எடைக்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து மின்தராசுகள், ரகசிய தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கி, கேஸ் பர்னர் உள்ளிட்ட பொருட்களும் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மலப்புறம் மாவட்ட போலீஸ் தலைவர் ஆர். விஸ்வநாத் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையிலேயே இந்த பெரிய கும்பல் சிக்கியது. மாணவர்களை...

இன்றைய15/02/2026 செய்தி தொகுப்புகள்

Image