சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிறதா தமிழகம்?
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏன் இப்படி சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது என்பது தெரியவில்லை. தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒருவன் அத்துமீறி சமூக விரோத செயலில் ஈடுபடுகிறான். அவன் மீதும் சரியான நடவடிக்கை இல்லை. பள்ளி மாணவர்கள் பலர் சேர்ந்து ஒரு அப்பாவி சக மாணவனை அடித்தே சாகடிக்கின்றனர். மேலும் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை மிரட்டும் காட்சிகளும் வெளியானது. பின்னாளில் அந்த மாணவர் சமூக விரோத செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்றதும் தெரிந்தது. கோவையில் சமூக விரோதிகள் சிலர் பெண்ணை பலாத்காரம் செய்கின்றனர். ஒரு அப்பாவி இளைஞனை போலீசார் சட்டவிரோதமாக அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். அதற்கு காரணமான பெண் இன்றும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். கள்ளச்சாராயத்தை விற்று பல உயிர்களை பலி வாங்கியவர்களும் இதே தமிழகத்தில் தான் இருக்கின்றனர். மேலும் கஞ்சா மது மெத்தபட்ட மெயின் போன்ற பல போதை வஸ்துகளும் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. மெத்தப்பட்ட மைன் போன்ற ஆபத்தான போதை வஸ்துக்களை உலக அளவில் வர்த்தகம் செய...