பங்குச் சந்தையில் காத்திருக்கும் ஆபத்து
தற்போது இந்திய பங்குச் சந்தை கிட்டத்தட்ட தன்னுடைய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் பல பங்குகளும் உச்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதாகவும் நிறுவனத்தின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் பங்குச் சந்தைக்கு வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பல நிறுவனங்களின் நிறுவனர்களும் முக்கிய பங்குதாரர்களும் தங்கள் நிறுவன பங்குகளை விற்று தங்களுக்கான லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாது பல புதிய நிறுவனங்களும் புதிய பங்குகளை வெளியிட்டு தங்களுக்கான தொகையை திரட்டி கொண்டு வருகின்றன. அதில் சில நிறுவனங்களில் புரமோட்டோர்கள் தங்கள் பங்குகளை offer for சேலம் இல் விற்பனை செய்து தங்களது உடைய லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து பங்குகளை வாங்குகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி வர வாய்ப்புள்ளது.
ஏனெனில் சந்தையில் தங்கள் நிறுவனத்தை பட்டியலிட்டு இருக்கும் முக்கிய முதலீட்டாளர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் உங்கள் லாபத்தை பதிவு செய்கிறார்கள் என்றால் சந்தையின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இதனால் குறுகிய காலத்தில் வீழ்ச்சி வர வாய்ப்புள்ளது என்று அறிந்து அவர்கள் பங்குச்சந்தையில் உள்ள முதலீடுகளை வெளியே எடுத்து வைத்துள்ளனர். மீண்டும் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை அடையும்போது அவர்கள் மீண்டும் புதியதாக முதலீடுகளை செய்வார்கள். இது அனைவரும் அறிந்தது.
ஆனாலும் சில்லறை முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீடுகள் கிடைக்கும் சிறிய ஆதாயத்திற்காகவும் தங்கள் பேராசையின் காரணமாகவும் இது போன்ற நேரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து தேவையில்லாமல் மாட்டும் வீட்டில் பூச்சிகளாக உள்ளார்கள்.
தற்போது சந்தை எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வரும் நிலையில் முதலீடுகளை அதிகம் செய்யாமல் நல்ல லாபத்தில் உள்ள பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் விற்பனை செய்து தொகை வெளியே எடுத்து சந்தை சரிவின்போது முதலீடு செய்வதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

.png)







Comments
Post a Comment