சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிறதா தமிழகம்?

 கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏன் இப்படி சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது என்பது தெரியவில்லை.

 


தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒருவன் அத்துமீறி சமூக விரோத செயலில் ஈடுபடுகிறான். அவன் மீதும் சரியான நடவடிக்கை இல்லை.

 பள்ளி மாணவர்கள் பலர் சேர்ந்து ஒரு அப்பாவி சக மாணவனை அடித்தே சாகடிக்கின்றனர்.

 மேலும் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை மிரட்டும் காட்சிகளும் வெளியானது. பின்னாளில் அந்த மாணவர் சமூக விரோத செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்றதும் தெரிந்தது.

கோவையில் சமூக விரோதிகள் சிலர் பெண்ணை பலாத்காரம் செய்கின்றனர்.


ஒரு அப்பாவி இளைஞனை போலீசார் சட்டவிரோதமாக அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். அதற்கு காரணமான பெண் இன்றும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்.

 கள்ளச்சாராயத்தை விற்று பல உயிர்களை பலி வாங்கியவர்களும் இதே தமிழகத்தில் தான் இருக்கின்றனர். மேலும் கஞ்சா மது மெத்தபட்ட மெயின் போன்ற பல போதை வஸ்துகளும் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது.

 மெத்தப்பட்ட மைன் போன்ற ஆபத்தான போதை வஸ்துக்களை உலக அளவில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த ஜாபர் சாதி காலும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை நினைக்கும் பொழுது நாம் எப்படிப்பட்ட நல்லாட்சியை தேர்ந்தெடுத்துள்ளோம் என்பது தெரிகிறது.

 அரசியல்வாதிகள் பலர் பாலியல் தொந்தரவுகள் செய்தது பற்றிய செய்திகளும் அன்றாடம் வெளிவந்து கொண்டிருப்பதோடு சில இடங்களில் சிறுமிகளிடம் கூட பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது பத்திரிகை செய்திகளில் வந்தது.

 பெண் பள்ளி மாணவிகளை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியில் மது அருந்தும் அளவிற்கு தைரியம் கொடுத்துள்ளது தமிழகம்.

 பல இடங்களில் கட்சிக் கொடியுடன் கார்களில் விரட்டிச் சென்று மிரட்டுவதையும் பல இடங்களில் ஆளும் கட்சியினர் என்ற மருமகள் தகராறுகளில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளில் பேசுவதையும் சமூக வலைத்தளங்களில் அன்றாடம் காண முடிகிறது.

 தற்போது ரயிலில் சென்ற ஒரு அப்பாவி வட இந்திய இளைஞனை கஞ்சா போதையில் தாக்கிய கொடூர காட்சிகளை பார்க்கும் பொழுது 

 கிட்டத்தட்ட தமிழ்நாடு சமூக விரோதிகளின், ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறிவிட்டதாகவே தோன்றுகிறது.

 இதுபோன்ற சம்பவங்கள் வேறு மாநிலங்களில் நடந்திருந்தால் தமிழகத்தின் அத்தனை செய்தி தொலைக்காட்சிகளும் அதைப் பற்றிய விவாதம் செய்திருக்கும்.

 இதுபோன்று பல சம்பவங்கள் நடந்தும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருந்தும் மத்திய அரசும் உங்கள் அரசின் மீது 356 போன்ற எந்த பிரிவையும் பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை இது போன்ற ஆட்சி தேர்தெடுத்த மக்கள் அவர்களாலேயே அழிந்து போகட்டும் என்று நினைக்கிறதோ மத்திய அரசு என்பதும் தெரியவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களாக வருவது பார்க்க முடிகிறது.

கடந்த கால அதிமுக ஆட்சியில் கூட குழந்தைகளைக் கடத்தியவர்கள் தப்பிச் சென்றபோது என்கவுண்டரில் சுடப்பட்டு உடனே தண்டனை வழங்கப்பட்டது. அதை மக்கள் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் காவல் நிறைய கழிவறைகளில் உடனே வழுக்கி விழுந்து கை, கால் உடைந்து தண்டனையை உடனே பெற்றதும் தெரிய வந்தது. அதனால் ஓரளவுக்கு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது.

 குற்றம் புரிந்து சிறைக்குச் சென்று சிறைவாசிகளாக இருப்பவர்களை கூட குற்றவாளிகள் என்று சொல்லாமல் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று பேசும் அரசியல்வாதிகள் தங்களின் வாக்கு வங்கியை நிலை நிறுத்துவதற்காக குற்றவாளிகளை சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் அரசியல் கட்சி சார்பாகவும்  பார்த்து அவர்களுக்கு சலுகை வழங்கி காப்பாற்ற துடிக்கும் மக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு சமூக விரோதிகளின் கூடாரமாக இருக்கும்.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்