திராவிட கூட்டத்தின் நரித்தந்திரம்
தமிழ்நாட்டில் தற்போது திராவிடத்தின் வழித்தோன்றல் நாங்கள் என்று திராவிடத்தின் பெருமையும் நாத்திகமும் பேசி வந்த திமுக தற்போது ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து ஆடிவரும் நரித்தந்திரம் பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நாத்திகமும் ஹிந்து எதிர்ப்பும் தங்களது முக்கிய கொள்கையாகவும் சிறுபான்மையினருக்கு நாங்கள் காவலர்கள் என்ற பிம்பத்தையும் கட்டமைத்து வந்தனர். சமீப காலமாக இந்து மக்களிடம் இவர்களின் பித்தலாட்டம் எடுபடவில்லை. அது மட்டுமல்லாமல் பெருமளவில் ஹிந்து வாக்கு வங்கியும் உருவாகி வருகிறது. இதனால் கலக்கமடைந்த திமுக தற்போது ஒரு புதிய நாடகத்தை தொடங்கியுள்ளது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி இருவரும் நாத்திகம் பேசிக்கொண்டு சிறுபான்மையினரின் கால்களை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால் ஸ்டாலின் மனைவியும் அவரது மருமகனும் ஹிந்து கோயில்களுக்கு செல்வதையும் அங்கு பூஜை, யாகங்கள் செய்வதையும் வேண்டுமென்றே ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தியாக்கி நாங்களும் ஹிந்து பற்றாளர்கள் தான் என்பது போல காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் நரி தந...