உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி
ஒவ்வொரு காலாண்டிற்கும் நமது நாட்டின் ஜிடிபி குறித்த அறிக்கை வெளியிடப்படும்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி குறித்த அறிக்கை வெளியானது இதில் இதுவரை இல்லாத அளவுக்கு 13.5% ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளது நமது நாடு.
இது இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாகும்.
இதே காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட போதிலும் அதைவிட குறைவாக வந்திருந்தாலும் மற்ற அனைத்து காலாண்டுகளையும் விட அதிகமானது மட்டுமல்லாமல் மற்ற உலக நாடுகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளை விட அதிகமாகவே உள்ளது என்பதும், கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் வேகம் எடுத்துள்ளது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
#Pothigaitimes #News #India #GTP
.jpeg)
Comments
Post a Comment