வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு விடுத்துள்ள புதிய செய்தி குறிப்பு ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் எட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pothigaitimes #Onam #Tamilnadu