கடந்த சில ஆண்டுகளாகவே பண பரிவர்த்தனைகளை தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி மக்கள் யுபியை வழியாக செலுத்திக் கொண்டு வந்தனர். இது வாடிக்கையாளர்கள் பலருக்கும் வசதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில்லறை வர்த்தகம் செய்பவர்களுக்கும் சில்லறை தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் இல்லாமல் எளிதாக தங்கள் பெற வேண்டிய தொகையினை பெற்று வந்தனர். தற்போது யுபிஐ ₹2000/- மேற்பட்ட வர்த்தக ரீதியிலான பண பரிமாற்றத்திற்கு 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கும் நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் தற்போது பல வணிக நிறுவனங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வலுக்கட்டாயமாக வலியுறுத்துகின்றனர். இது ரெண்டாயிரத்துக்கு குறைவான பண பரிமாற்றத்திற்கும் வலியுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணமாக வணிகர்கள் கூறுவது நீங்கள் செலுத்துவது 2000 க்கு குறைவான சிறு தொகையாக இருந்தாலும் நாங்கள் மொத்த தொகையாக எங்களது பொருட்களை விநியோகிக்கும் வியாபாரிகளுக்கு செலுத்தும் பொழுது அவர்களுக்கு அது கட்டணமாக செலுத்த வேண்டிய சூழ்நிலை வருகிறது. இதனால் அவர்கள் எங்களிடம் அந்த கட்...
தற்போது உலக அளவில் வாகன போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் பலரும் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் நிரப்பும் வாகனங்களை தவிர்த்து தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர். இதனால் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் பல புதுவித மாடல்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் களம் இறக்கி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்ற எரிபொருள் நிரப்பும் வாகனங்களை விட செலவுகள் குறைந்ததாகவும் வாகனங்களின் பராமரிப்பு செலவு மற்றும் வாகனங்களின் விலையும் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது உலகில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல வாகனங்களையும் பலவித சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து களம் இறக்கி வரும் நிலையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சந்தையில் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் வாகனங்களுக்கு தேவையில்லாத பல சிறப்பு அம்சங்களையும் வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து கொள்ளாமலேயே அளித்து வாகனங்களின் விலையை உயர்த்தும் உத்தியை கையாளுகின்றனர். எடுத்துக்காட்டாக இரு...
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அபர்ஜித் தீர்க்க என்ற இளைஞர் இந்தியாவில் அரசியல் செய்ய கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை உருவாக்கினார். இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்ற அமைப்பின் மூலம் நாட்டின் பல இடங்களில் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதை வைத்து அரசியல் சூழ்நிலையை மாற்ற முடியாதா? என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நோக்கம் என்னவாக இருக்கிறது என்றால் இந்திய அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த அரசும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஏதாவது ஒரு நெருக்கடிக்கு உள்ளாய் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் நாட்டின் வளர்ச்சி பற்றியோ அல்லது அடுத்த கட்டத்திட்டங்கள் பற்றியோ யோசிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். அதுமட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறை எப்படியாவது தங்கள் வலைக்குள் வீழ்த்தி தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்து விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டு வ...
கேரளாவில் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரான ஃபாஸ்மினா ஜாக்கீர் (Fazmina Zakir) மற்றும் ஒரு வயது முதிர்ந்த ஆட்டோ டிரைவருக்கு இடையே நடந்த இந்த சர்ச்சை, தற்போது கேரள சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் தற்போதைய நிலவரம் இதோ: ஃபாஸ்மினா ஒரு நாள் இரவு நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி, டாடாவின் பிரபல துணிக்கடையான **"ஜூடியோ" (Zudio)** ஷோரூமிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வயது முதிர்ந்த நபர் என்பதால், அவருக்கு 'ஜூடியோ' என்ற பெயர் சரியாகப் புரியவில்லை. அவர் அதை 'ஸ்டுடியோ' (Studio)என்று தவறாகப் புரிந்து கொண்டார். அதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர், "இங்கே நிறைய போட்டோ ஸ்டுடியோக்கள் இருக்கின்றன, உங்களுக்கு எந்த ஸ்டுடியோவிற்கு போக வேண்டும்?" என்று சாதாரணக் கேள்வியைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஃபாஸ்மினாவின் வீடியோவும் சர்ச்சையும் ஆட்டோ ஓட்டுநர் கேட்ட கேள்வியை தவறான நோக்கத்தில் எடுத்துக்கொண்ட ஃபாஸ்மினா, உடனே தனது மொபைலை எடுத்து அவரை வீடியோ செய்யத் தொடங்கினார். மேலும், அந்த ஆட்டோ ஓட்டுநர் **மது...
*20 ஆண்டுகளாக போலி பெயரில் பாஸ்போர்ட் பயன்படுத்தி சவூதியில் வேலை: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது* திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலி முகவரி மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர், சொந்த ஊருக்குத் திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி, பரதர் உவரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 'ஜார்ஜ், தந்தை பெயர் போரஸ்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையா...
தமிழ்நாடு எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம்,மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டம் என பல பிரிவுகளில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் மாநில பாடத்திட்ட மொழிகளில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சிபிஎஸ்சி மற்ற பாடத்திட்டங்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுக்க படிக்கவும் முடியும். தற்போது நம் பொதிகை டைம்ஸ் இதழ் சார்பாக சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் படிக்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் பலருக்கும் தமிழை சரியாக எழுத படிக்க கூட தெரியவில்லை என்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் இங்கு சில அரசியல் கட்சிகள் தமிழை வளர்ப்போம், தமிழ் தான் உயிர் மூச்சு என்று வசனம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழ் பயின்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்...
ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பயன்படுத்தி பயன்படுத்தி வருவது ஆன்லைன் வர்த்தகத்தை தான். இது வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை தொலைபேசி வாயிலாக கண்டறிந்து அவற்றின் தரம் குறித்த விபரங்களை ரிவ்யூகள் மூலமாக அறிந்து கொண்டு ஆர்டர் செய்ய வசதியாக உள்ளது. மேலும் பல பொருட்கள் சந்தை விலையை விட குறைவாக கிடைக்கிறது. பொருட்களை வாங்க பல கடைகளுக்கு அணிந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற காரணங்களால் மக்கள் அதிகம் பயன்படுத்துவது ஆன்லைன் வர்த்தக தளங்களாக மாறி வருகிறது. இப்போது இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் வர்த்தகம் பல பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் பல பொருட்கள் சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு வருகிறது. இதனால் நமது நாட்டில் நடக்கும் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி தொகை மற்றும் லாபம் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்கிறது. இதனால் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு ந...
அரசியலைப் பொருத்தவரை எல்லா அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருப்பார். பல அரசியல்வாதிகளும் தாங்கள் இருந்த கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிகளுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பொருத்தவரையில் அவர் எம்ஜிஆர் காலம் தொட்டு எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் அதன்பின் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரின் விசுவாசத்தை பார்த்து தான் ஜெயலலிதாவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவரின் முதல்வராக்கி அரசையும் கட்சியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் அதே விசுவாசத்தோடு கண்ணியத்தோடும் மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். இதனால் அதிமுகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வம் சிறந்த விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா கட்சியை கைப்பற்ற நினைத்தபோது அதற்கு எதிராக போர் போடி தூக்கிட்டு தர்மயுத்தம் செய்ததிலிருந்து ஆரம்பித்தது அவரது வீழ்ச்சி. ஓபிஎஸ்ஐ பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த நிர்வாகி இல்லை என்பது அதிமுக கட்சியின் தொண்டர்களை கணித்தது. அதன...
அவனின் கையில் ஒரு பாட்டில் இருந்தது. பிரீதியின் முகத்தை நேராக பார்த்து, அந்த பாட்டிலில் இருந்த திரவத்தை அவன் முழு வலிமையுடன் அவளின் மீது ஊற்றினான்… வடக்கு டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள அமர்சிங் ராத்தியின் வீடு அன்று மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அதற்குக் காரணம் வேறு எதுவும் இல்லை. அந்த வீட்டின் 24 வயது மகள் பிரீதி ராத்தி, இந்திய கடற்படையில் (Indian Navy) நர்சிங் ஆபிசராக – லெப்டினன்ட் ரேங்கில் வேலை பெற்றிருந்தாள். பல ஆண்டுகளான கடுமையான உழைப்புக்கும் படிப்பிற்கும் பிறகு கிடைத்த வெற்றி அது. ராணுவத்திலோ அல்லது கடற்படையிலோ சேவை செய்ய வேண்டும் என்பதே பிரீதியின் மிகப் பெரிய கனவு. மும்பை கோலாபா பகுதியில் உள்ள INHS அஷ்வினி மருத்துவமனையில் பணியில் சேர்வதற்காக பிரீதி பயணம் மேற்கொண்டாள். 2013 மே 1-ம் தேதி, டெல்லி நிசாமுத்தீன் நிலையத்திலிருந்து கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவள் புறப்பட்டாள். பிரீதியுடன், அவளின் தந்தை அமர்சிங் ராத்தி, மாமா வினோத் குமார், மாமி சுனிதா ஆகியோரும் பயணம் செய்தனர். அடுத்த நாள் காலை சுமார் 8 மணியளவில், ரயில் மும்பை பாந்த்ரா டெர்மினஸில் வந்து சேர்ந்தது. கூட்ட...
Comments
Post a Comment