திராவிடத்திற்கு முடிவுரை எழுதுகிறாரா? ஸ்டாலின்


 திராவிடத்திற்கு முடிவுரை எழுதுகிறாரா? ஸ்டாலின்


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகாலம் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது திராவிடம் என்றால் அது மிகையில்லை.


ஈ வெ ராமசாமி அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் பல பரிமாணங்களை சந்தித்து அரசியலில் நுழைந்து 50 ஆண்டு காலம் தமிழக மக்களை இங்கிலாந்து பிடியில் வைத்திருந்தது.

திராவிடம் என்பது மற்றவர்களின் சித்தாந்தத்தையும் கொள்கை கோட்பாடுகளையும் மதிக்காமல் தங்கள் சித்தாந்தங்களை மட்டுமே பெரிதாக பேசி மற்ற சித்தாந்தங்களையும் நம்பிக்கைகளையும் கேள்வி கிண்டல் செய்து வளர்த்தெடுக்கப்பட்டது.

இவர்கள் திராவிடம் என்ற பெயரில் நமது நாட்டின் பாரம்பரிய வாழ்வியல் முறை மற்றும் கலாச்சாரம் இவற்றை சிறிது சிறிதாக அளித்து ஒரு ஒழுக்கம் கெட்ட சமுதாயத்தை உருவாக்கவே வழிவகை செய்து வந்தனர்.

அதனை இப்போது கண்கூடாக பார்த்து அறிந்து கொண்ட மக்கள் பலர் மீண்டும் தங்கள் இந்து வாழ்வியல் முறை மற்றும் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுத்த மாறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் திராவிடம் என்று வாய் கிழிய பேசி வந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பமும் மெல்ல திராவிடத்தை கைவிட தொடங்கியுள்ளது.

மக்களின் திராவிடத்துக்கு எதிரான எழுச்சியை பார்த்து இது போன்ற ஒரு நிலைக்கு அவர்கள் ஏற்கனவே வந்திருந்தாலும் அது வெளி காட்டாமல் வைத்திருந்ததை தற்போது பகிரங்கமாக வெளிக்காட்டி வருகின்றனர். 

திராவிட சித்தாந்தத்தின் படி ஐந்து மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் திராவிடர் என்பது அவர்களது கூற்று. ஆனால் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வேற எந்த மொழி பேசும் மக்களிடம் திராவிடம் எடுபடவில்லை. தமிழகத்திலும் திராவிடத்தை பெரிதாக பேசி வளர்த்து விட்டவர்கள் அனைவரும் தெலுங்கு பேசும் மற்றும் கன்னடம் பேசும் மற்ற மொழி மக்களே. இவர்கள் தமிழனை ஏமாற்றி அவர்கள் ஆட்சியைப் பிடிக்கவும் அதிகாரத்தை பிடிக்கும் தங்கள் வாழ்வை வளமாக்குவோமே திராவிடத்தை கையில் எடுத்துக் கையாண்டனர்.

தற்போது மக்கள் உண்மையை புரிந்து கொண்டு மாறி வருவதால் தங்கள் அணுகுமுறையும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றனர். இதனால் இனி திராவிடத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்