அம்பையில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்ற 3 நாட்கள் அவகாசம்
#அம்பையில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்ற 3 நாட்கள் அவகாசம்
அம்பாசமுத்திரத் தில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள ரோட்டோர ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று மாலையில் அங்கு வந்து கடைகளை அகற்றக் கோரி சொல்லி வந்தனர்.. இந்த சூழலில் அங்கிருந்த நபர்களுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது...உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அங்கு வந்தனர்.. பின்பு இரு தரப்பிற்கும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை வாக்குவாதம் நடைபெற்றது ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என்ற முடிவில் உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் களத்தில் திடீரென உடனடியாக ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் லாரியுடன் வந்தனர். அம்பாசமுத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசாரும் வந்தனர். இத்தகவலறித்து, அங்கு திரண்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க., மற்றும் வி.எச்.பி., அமைப்பினர் அதிகாரிகளுடன் முறையிட்டனர். கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இறுதியில், 3 நாட்கள் கால அவகாசம் அளித்து நெடுஞ்சாலை துறையினர் அங்கிருந்து சென்றனர்... பொது மக்களின் கேள்வி இந்த ஆக்கிரமிப்பானது அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டர் திரையரங்கம் முன்பாக மட்டும் தானா? அல்லது அம்பாசமுத்திரம் முழுவதுமாக உள்ள பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையா? ஏனென்றால் வேற எங்கேயும் ஆக்கிரம்பு சம்பந்தமாக எதுவும் அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை... இந்த இடத்தில் மட்டும் செய்வதற்கு வேற ஏதும் காரணம் உள்ளதா? என்ற கேள்வி வைத்து வருகின்றனர்...







Comments
Post a Comment