தென்காசியில் பெட்ரோல் குண்டு வீச்சு

 

தென்காசியில் பெட்ரோல் குண்டு வீச்சு

 தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனிம வளங்களை சுரண்டி விற்பதே முக்கியத்து தொழிலாக நடந்து வருகிறது. இதனால் இரவு பகல் பாராமல் எல்லா நேரங்களிலும் கனரக வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் இந்தக் கனிம வள கொள்ளை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தென்காசி பகுதியில் கனிம வளங்களை ஏற்றி வந்த கனரக வாகனத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து நேற்று நள்ளிரவில் கேரளாவிற்கு கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரி அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அதனை வழி மறித்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் லாரி ஓட்டுநர் செங்கோட்டை நாராயணசாமி மகன் சுப்பிரமணியன் (38) பலத்த காயமடைந்தார்.


 இதுபோன்ற தாக்குதல்களை ஒன்றும் அறியாத ஓட்டுநர் மீது நடத்தி என்ன பயன்? கனிம வளங்களை கடத்த துணை போகும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் கனிம வளங்களை கடத்தி விற்கும் தொழில் அதிபர்கள் போன்றவர்கள் மீது காட்ட வேண்டிய எதிர்ப்பை அன்றாட பிழைப்புக்காக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களிடம் காட்டுவது சரியானதா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

கனவு கலைந்தது. கருத்து தெரிந்தது.

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

ஓட்டு போட வந்தவர் மாயம்

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக