டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
தற்போது உலக மார்க்கெட்டில் தங்கம் சில காலங்களாக அதிரடியாக அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியா சைனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிகம் வாங்கி வருவதும் உலகின் பல பகுதிகளிலும் போர் பதற்றம் போன்ற கால சூழல்களும் டாலர் மற்றும் இந்திய ரூபாய்களின் மதிப்பு ஏற்ற இறக்கங்களும் முக்கிய காரணங்களாக உள்ளது.
இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? என யோசித்து வருகின்றனர்.
தங்கத்தை நேரடியாக அணிகலன்களாகவோ, காசாகவோ வாங்கும் பொழுது அணிகலன்களுக்கு செய்கூலி சேதாரம் மற்றும் ஜி எஸ் டி வருக என அனைத்தும் சேர்ந்து குறைந்தபட்சம் எட்டு ஏழு எட்டு சதவீத முதல் அதிகபட்சம் 18 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டி வரும். அதே சமயத்தில் தங்க காசாக வாங்கும் பொழுது அதற்கும் டை சார்ஜ் மற்றும் ஜி எஸ் டி என நான்கைந்து சதவீதம் வரை செலவு செய்ய வேண்டி வரும்.
இதனால் பலரும் தற்போது டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேகரிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக பல மொபைல் செயலிகள் செயல்பட்டு வருகின்றன. பல நகைக்கடை உரிமையாளர்களும் இந்தவித மொபைல் செயல்களை உருவாக்கி முதலீடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் டிஜிட்டல் முறையில் டீமேட் அக்கவுண்ட் மூலம் வங்கிகள், நிதி மேலாண்மை நிறுவனங்கள் இடிஎப் எனப்படும் தங்க சிறு சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த வகை சேமிப்பு திட்டத்தில் நாம் சிறுக சிறுக தினம் அன்றாட செலவு செய்வது போல சிறுக சிறுக சேமிக்க முடியும். இதற்கு ஒரு சிறு தொகையை கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். அதனால் இது தங்க நகைகளாகவோ காசாகவோ வாங்குவதை விட சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ஆனால் இதிலும் குறுகிய கால வருமான வரி அல்லது நீண்ட கால வருமான வரி நீங்கள் அடையும் லாபத்திற்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும்.
இதில் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் பொழுது மொபைல் செயலிகள் மூலம் தனியாரிடம் முதலீடு செய்வது ஆபத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த மொபைல் செயலில் பொதுமக்கள் அன்றாடம் செலுத்தும் தொகை காண தங்கம் அந்தந்த நிறுவனங்கள் மூலம் வாங்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாது. அவ்வாறு அவர்கள் தங்கத்தை வாங்கி சேமிக்கவில்லை என்றால் நாம் கட்டிய தொகைக்கு ஏற்ப பின்னாலில் நாம் தங்கம் வாங்க செல்லும் பொழுது அல்லது பணமாக பெற முயற்சிக்கும் பொழுது தங்கத்தின் விலை அபரிமிதமாக கூடியிருந்தால் அந்தத் தொகை அவர்களிடம் இருக்க வாய்ப்பு உள்ளதா? என்பது சந்தேகம்.
இதனால் பின்னால் முதலீடு செய்த தொகை கிடைக்காமல் போனாலும் அல்லது வேறு ஏதாவது பிரச்சனை வந்தாலும் மொபைல் செயலி மூலம் சேர்க்கப்படும் டிஜிட்டல் தங்கத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவித அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பும் இல்லை. இதனால் பின்னாளில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு அதிகாரம் பெற்ற அமைப்பு ஏதும் இல்லாததால் இந்த முறை முதலீடு பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது.
அதேசமயம் கோல்ட் இடிஎஃப் எனப்படும் செபி வரைமுறைக்குட்பட்ட நடத்தப்படும் இடிஎஃப் பண்டுகளில் நாம் செலுத்தும் தொகைக்கு ஏற்ப முதலீட்டுக்கேற்ப தங்கம் வரவு வைக்கப்படும். இதனை செபி எனப்படும் பங்குச்சந்தை முதலீடுகளை கண்காணிக்கும் அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதால் இவ்வகை முதலீடு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
மேலும் இடிஎப் முறையில் சேர்க்கப்படும் தங்கமானது நாம் அணிகலன்களாகவும் தங்க காசுகளாகவும் வாங்குவதை விட அதிக லாபம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நமது அவசர தேவைக்கு உடனடியாக அவற்றை விற்று பணம் பெரும் வசதியும் உள்ளது.
இது பற்றிய மேலும் விபரங்களை சரியான நிதி ஆலோசகர் இடம் ஆலோசனைப் பெற்று முதலீடு செய்ய அனைவரையும் வலியுறுத்துகிறோம்.







Comments
Post a Comment