நெல்லை மாவட்டம் மானூரில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு...

 

 (05:02:2026) நெல்லை மாவட்டம் மானூரில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு... 

(05:02:2026) அன்று காலை வன்னிக்கோனேந்தல் முதல் செட்டிகுறிச்சிவரை பயணம் செய்த ஒரு ஆசிரியையை உரிய செட்டிகுறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த சொல்லி எவ்வளவு வலியுறுத்தியும் செவிசாய்க்காமல் நடத்துனர்  வேண்டுமென்றே செட்டிகுறிச்சி கிராமம் கடந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் கடந்து நடுகாட்டில் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார்... 


இந்த இடத்தில் என்னை இறக்கினால் நான் எவ்வாறு எப்படி பள்ளிக்கு செல்ல முடியும் என ஆசிரியை நடத்துனரை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்... இதனை ஒரு பொருட்டாக கருதாதே பேருந்து நடத்துனர்... நீ யாரிடம் கேட்டு பேருந்து ஏறினாய்... இங்க இறங்கவில்லை என்றால் அழகியபாண்டியாபுரத்தில்தான் நிற்கும் என திமிராக ஒருமையில் பதிலளித்து உள்ளார்... 

இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தாமல் விடக்கூடாது என முடிவெடுத்த ஆசிரியை நான் எங்கையும் இறங்க மாட்டேன் மானூரில் இறக்கிவிடுங்கள் யார் என்று காட்டுகிறேன் என முடிவெடுத்து மானூரில் இறங்கி காவல்நிலையத்தில் எழுத்து பூர்வமாக நடந்தை புகாராக எழுதி கொடுத்து காவல்துறையினரின் கவனத்திற்கு இவ்விசயம் கொண்டு செல்லப்பட்டது... 


புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் மறுமார்க்கத்தில் பேருந்து வரும் நேரம் அறிந்து அவ்வாறு வந்தவேளையில் காவல்துறையினர் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளிடமும் மாற்று பேருந்தில் செல்லுமாறு வலியுறுத்தி பேருந்தை சுமார் 5 மணி நேரம் மானூர் காவல் நிலைய வாளகத்தில் சிறைப்படுத்தி பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களை கடுமையாக கண்டித்து பேருந்து உரிமையாளர் மற்றும் மேலாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து... 

உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நடிவடிக்கை எடுத்து கட்டுப்பட வைத்தனர்... 


இப்பதிவு ஒவ்வொரு தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் இது ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பதிவு செய்யப்படுகிறது... 


தூரிதமாக செயல்பட்ட மானூர் காவல்துறையினரை மனதார பாராட்டி வாழ்த்தும் பொதுமக்கள்...

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

ஓட்டு போட வந்தவர் மாயம்

கனவு கலைந்தது. கருத்து தெரிந்தது.

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக