தமிழ்நாட்டின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்.

 


தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில், டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இரு பணிகளுக்கும் தகுதி பெற்றுள்ள முதல் பெண் என்ற பெருமையை ரம்யா (33) பெற்றுள்ளார்.❤️❤️🚍👑


இவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள்:


சொந்த ஊர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார்கோவில்.


பணி அனுபவம்: சென்னையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் பயிற்றுநர் மற்றும் கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.


தகுதி: 2023-ல் அரசுப் போக்குவரத்துப் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற ரம்யா, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பித்துத் தேர்வாகியுள்ளார்.❤️❤️🚍👑


பணி நியமனம்: தற்போது கும்பகோணம் கோட்டத்தில் ஓட்டுநர் பயிற்சி பெற்று வரும் இவர், விரைவில் சீர்காழியில் தனது பணியைத் தொடங்க உள்ளார்.


சமீபத்தில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ரம்யா, இக்கோட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர்-நடத்துனர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

ஓட்டு போட வந்தவர் மாயம்

கனவு கலைந்தது. கருத்து தெரிந்தது.

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக