லஞ்சம்: கணவன் மனைவி கைது
லஞ்சம்: கணவன் மனைவி கைது ♦️கோவை வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அபினேஷ் என்பவர் தனது நிறுவனம் சார்பில் அதிகமாக செலுத்திய உள்ளீட்டு வரியை (Input Tax) திரும்பப் பெற விண்ணப்பித்தார். ஆனால் அந்த வேலையை முடித்துத்தர ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் என மகேஸ்வரி கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ரூ. 60,000 தருவதாக ஒப்புக்கொண்டார். ♦️எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனப் பொடி தடவிய பணத்துடன் அபினேஷ் சென்றார். உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் என்பவரின் மொபைல் எண்ணை கொடுத்து லஞ்சப் பணம் ரூ. 60,000-ஐ அவரிடம் கொடுக்கும்படி தெரிவித்தார். அபினேஷ் அழைத்த போது கொடிசியா மைதானம் அருகில் இருப்பதாகக் கூறிய தனசேகரன் அங்கு வருமாறு தெரிவித்தார். ♦️தனசேகரன் இருந்த இடத்திற்குச் சென்ற அபினேஷ் காரில் ஏறி அமர்ந்து பணத்தைக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தனசேகரனை பிடித்தனர். விசாரணையில் அவர் வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரிய...