எப்படி இருக்கும் தமிழகத்தின் எதிர்காலம்?
இன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருவது தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 5000 மொத்தமாக பயனாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது பற்றி அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இது தமிழக சட்டசபை தேர்தல் 2026 கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது தேர்தல் அறிக்கைகளில் இரண்டு திராவிட கட்சிகளுமே பாரபட்சம் இல்லாமல் மகளிர் உரிமைத் தொகையை 2000 ஆக உயர்த்தி கொடுப்போம் என்று வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர்.
இது போன்று மக்களுக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல் அவர்களை சோம்பேறி ஆக்கும் பொருட்டு அளிக்கப்படும் எல்லா நலத்திட்டங்களுமே வரும் காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் வேலை வாய்ப்புகளும் புதிய தொழில்களோ தமிழகத்தில் உருவாவதற்கு வாய்ப்புகளை குறைக்கும் என்பது உண்மை.
இப்போதே கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நியாய விலை கடைகளில் கிடைக்கும் இலவச அரிசியையும் மகளிர் உரிமைத்தொகை பணத்தையும் வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள பெண்கள் சிலர் வீட்டிலிருந்தபடியே தையல் தொழிலும் அல்லது பீடி சுற்றுதல் போன்ற தொழில்களை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதால் பல கிராமப்புற ஆண்கள் எந்த வேலைகளுக்கும் செல்லாமல் வெட்டியாய் சுற்றித் திரிவதோடு மது கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவது மேலும் தேவையில்லாத சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள சிறிய தொழில் நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள் என பலவும் பாதிக்கப்படுவதோடு விவசாய வேலைகளுக்கும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காமராஜர் காலம் முதற்கொண்டு பல அரசுகளும் கொண்டு வந்த பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி அனைத்தும் மெல்ல மெல்ல வீழ்ச்சியை நோக்கிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதோடு மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் குடி பெயர்ந்து பல பெரு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறும் நிலையும் ஏற்படலாம்.
ஆக மொத்தத்தில் தமிழின அழிவுக்கு திராவிட கட்சிகள் அச்சாரம் போட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இறுதியில் தமிழர்களை ஒரு வேளை சோற்றுக்கு கூட பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களாக மாற்றும் வரை இந்த அரசியல் கட்சிகள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாது பொழுது என்பது தெளிவாக தெரிகிறது.
.jpeg)
.jpeg)
.jpeg)

Comments
Post a Comment