Posts

லஞ்சம்: கணவன் மனைவி கைது

Image
  லஞ்சம்: கணவன் மனைவி கைது ♦️கோவை வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அபினேஷ் என்பவர் தனது நிறுவனம் சார்பில் அதிகமாக செலுத்திய உள்ளீட்டு வரியை (Input Tax) திரும்பப் பெற விண்ணப்பித்தார். ஆனால் அந்த வேலையை முடித்துத்தர ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் என மகேஸ்வரி கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ரூ. 60,000 தருவதாக ஒப்புக்கொண்டார்.  ♦️எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனப் பொடி தடவிய பணத்துடன் அபினேஷ் சென்றார். உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் என்பவரின் மொபைல் எண்ணை கொடுத்து லஞ்சப் பணம் ரூ. 60,000-ஐ அவரிடம் கொடுக்கும்படி தெரிவித்தார். அபினேஷ் அழைத்த போது கொடிசியா மைதானம் அருகில் இருப்பதாகக் கூறிய தனசேகரன் அங்கு வருமாறு தெரிவித்தார்.  ♦️தனசேகரன் இருந்த இடத்திற்குச் சென்ற அபினேஷ் காரில் ஏறி அமர்ந்து பணத்தைக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தனசேகரனை பிடித்தனர். விசாரணையில் அவர் வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரிய...

இன்றைய17/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் பலி

Image
  விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் (தொப்பலாக்கரை கானா விலக்கு அருகே )இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரும் - காரும் - ஒரு இருசக்கர வாகனமும் மோதி விபத்து.😭😭 தந்தை மகன் என இருவர் பலி. சிலர் படுகாயம். 😭😭 சிவராத்திரி வழிபாடு காரணமாக அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு செய்ய சென்று திரும்புவது தெரிகிறது. அதன் காரணமாக அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது.  நண்பர்களே... குறிப்பாக இரவு முழுவதும் தூங்காத வாகன ஓட்டிகள் கவனம். சிறிதாக தூக்கம் வந்தாலும் கூட கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து பின்னர் வாகனத்தை  ஓட்டவும்.🙏👍

தோவாளை பகுதியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து

Image
  கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை நான்கு வழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இறந்தவர்கள் அடையாளம் தெரிந்தது. திருநெல்வேலி மாவட்டம்வடக்கன்குளம் அருகே உள்ள கோலியான் குளத்தை சேர்ந்ததாய் கலா, அவரது மகன் ஆகியோர் விபத்தில் பலியானவர்கள். காயமடைந்த ஆட்டோ டிரைவர் அவரது இன்னொரு மகனாவார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.அவரது மகன்கள் இருவருடன் ஆட்டோவில் சென்று போது விபத்தில் சிக்கியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் திரு பச்சைமால் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

இன்றைய16/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

மலப்புரம் மாவட்டத்தில் சுற்றிய போதை பொருள் கடத்தல் கும்பல்

Image
  மலப்புறத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: கோடிகள் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ உடன் தம்பதியர் உட்பட மூவர் கைது! மலப்புறம் மாவட்டத்தை அதிரவைத்த இன்னொரு பெரிய போதைப்பொருள் பறிமுதல். University of Calicut அருகே உள்ள ஒரு வீட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டதாக கூறப்படும் போதைப்பொருள் சங்கிலியை போலீசார் சிதைத்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 1.16 கிலோ எம்.டி.எம்.ஏ மற்றும் ஆவணமற்ற 21 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. 53 வயதான அசீஸ், அவரது மனைவி 50 வயதான கமருன்னீசா, அசீஸின் மகன் ஜாசிரின் நண்பர் சலாவுத்தீன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அசீஸின் மகன் ஜாசிர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் எடைக்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து மின்தராசுகள், ரகசிய தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கி, கேஸ் பர்னர் உள்ளிட்ட பொருட்களும் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மலப்புறம் மாவட்ட போலீஸ் தலைவர் ஆர். விஸ்வநாத் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையிலேயே இந்த பெரிய கும்பல் சிக்கியது. மாணவர்களை...

இன்றைய15/02/2026 செய்தி தொகுப்புகள்

Image

பெங்களூருவில் கார் விப*த்தில் உயி*ரிழந்த ஆறு மாணவர்கள்😭

Image
  பெங்களூருவில் கார் விப*த்தில் உயி*ரிழந்த ஆறு மாணவர்கள்😭 உள்ளம் பதறாமல் இந்த செய்தியை வாசிக்க முடியாது. Bengaluru நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்து துயரமாக மாறியுள்ளது. ஹோஸ்கோட்டை–தபாஸ்பேட்டை தேசிய நெடுஞ்சாலை (NH-648) பகுதியில் சத்தியவர கிராமம் அருகே நடந்த இந்த விபத்தில், கனவுகள் நிறைவேறாமல் ஆறு மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயி*ரி*ழந்தனர்.😭😭 தேவனஹள்ளி நோக்கி அதிவேகமாக சென்ற எக்ஸ்யூவி 700 கார், முன் சென்ற பைக்கில் மோதியதுதான் இந்த துயரத்தின் தொடக்கம். கட்டுப்பாட்டை இழந்த கார் பின்னர் அருகிலிருந்த லாரியுடன் மோதி சிதறியது. முற்றிலும் நொறுங்கிய காரின் காட்சி, விபத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது.  காரில் இருந்த அஷ்வின், அர்ஹன் ஷரீஃப், அயான் அலி, ஏதன் ஜார்ஜ், பரத் ஆகிய மாணவர்களும், பைக் பயணியான ககனும் சம்பவ இடத்திலேயே உயி*ரிழ*ந்தனர். உயிரி*ழந்த*வர்களில் ஐந்து பேர் பெங்களூருவிலுள்ள ஆர்.வி. பியு மற்றும் சிஎம்ஆர் கல்லூரி மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.😭 நம் சாலைகளில் அதிவேகம் பல நேரங்களில் இவ்வாறான இளம் உயிர்களையே பறித்துக்கொள்கிறது. ஒரு நொடிக்கான கவனக்...

இன்றைய14/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

எப்படி இருக்கும் தமிழகத்தின் எதிர்காலம்?

Image
 இன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருவது தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 5000 மொத்தமாக பயனாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது பற்றி அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.  இது தமிழக சட்டசபை தேர்தல் 2026 கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது அனைவருக்கும் தெரியும்.  இப்போது தேர்தல் அறிக்கைகளில் இரண்டு திராவிட கட்சிகளுமே பாரபட்சம் இல்லாமல் மகளிர் உரிமைத் தொகையை 2000 ஆக உயர்த்தி கொடுப்போம் என்று வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர்.  இது போன்று மக்களுக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல் அவர்களை சோம்பேறி ஆக்கும் பொருட்டு அளிக்கப்படும் எல்லா நலத்திட்டங்களுமே வரும் காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் வேலை வாய்ப்புகளும் புதிய தொழில்களோ தமிழகத்தில் உருவாவதற்கு வாய்ப்புகளை குறைக்கும் என்பது உண்மை.  இப்போதே கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நியாய விலை கடைகளில் கிடைக்கும் இலவச அரிசியையும் மகளிர் உரிமைத்தொகை பணத்தையும் வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள பெண்கள் சிலர் வீட்டிலிருந்தபடியே தையல் தொழிலும் அல்லது பீடி...

உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்

Image
 அன்பார்ந்த பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தற்போது நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழ் சார்பாக தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்வி குழுமத்துடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு தென்காசி மாவட்டத்திற்காக நடத்தப்பட்டு வருகிறது.  இதில் தென்காசி கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.  மேலே உள்ள தொகுதிகளில் வாக்களிக்க உள்ள வாசகர்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு கேள்விகளைப் படித்து அதற்கான பதில்களை எங்கள் டிஜிட்டல் இதழில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு பக்கத்தில் 12 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நீங்கள் அளிக்கும் இந்த கருத்துக் கணிப்பு பங்களிப்பின் இறுதி முடிவு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி 2026 அன்று நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழில் வெளியிடப்படும்.  வாசகர்கள் அனைவரும் தவறாது தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம்

Image
  இது பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் 2 வயது வர்ஷா மற்றும் 4 வயது பானு ஆகிய இரண்டு பிஞ்சு உயிர்கள் ஒரு கோர விபத்தில் பறிபோயுள்ளன. அவர்களது தந்தை பால் வாங்குவதற்காக குழந்தைகளை அழைத்துச் சென்றபோது, திரும்பிய ஒரு பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி, குழந்தைகள் மீது ஏறியது. இதில் அந்த இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயி😥😥😭ரி😭😭ழந்😭😭😭தனர். ஒரு சாதாரண காலைப் பொழுது, சில நொடிகளில் ஒரு பேரிடராக மாறியுள்ளது.  எந்தவொரு பெற்றோருக்கும் இத்தகைய வலி ஏற்படக்கூடாது. இது வெறும் விபத்து மட்டுமல்ல — சாலை பாதுகாப்பு, குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் ஒரு பள்ளிப் பேருந்தை ஓட்டும்போது இருக்க வேண்டிய பொறுப்பு ஆகியவற்றை நமக்கு நினைவூட்டும் ஒரு எச்சரிக்கை. துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு எமது பிரார்த்தனைகளும், மனவலிமையும் உரித்தாகட்டும். 🕊️🙏 பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுங்கள். விழிப்புடன் இருங்கள். ஒரு நொடி கவனக்குறைவு பல உயிர்களை அழித்துவிடும்.🙏🤝

இன்றைய12/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

தோவாளை பைபாஸ் அருகே கோர விபத்து.!

Image
  தோவாளை பைபாஸ் அருகே கோர விபத்து.!  கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை நான்கு வழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயி😭ரிழ😭ந்தனர். படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் அனுமதி.கார் டிரைவர் தப்பியோட்டம்

அமைச்சரின் முன்னாள் உதவியாளர் மீது மோசடி குற்றச்சாட்டு

Image
  அமைச்சரின் முன்னாள் உதவியாளரின் நிறுவனம் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார்  அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெயரில் பணம் பெற்று மோசடி செய்ததாக ஏராளமானோர் புகார் அளித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர் அவர் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனிடம் உதவியாளராக இருந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு நீக்கப்பட்டவர் மதுரை கலைநகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் பாலாஜி (42). இவரும், இவரது மனைவி கலாவதியும் வீட்டு மனைகளை ஏமாற்றி வாங்கியது, ரியல் எஸ்டேட் தொழில் என்ற பெயரில் பொதுமக்களிடம் தவணை முறையில் பணம் வசூலித்து மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, ஜெய் பாலாஜியிடம் நெருக்கமாக இருந்த அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பட்டியலை சேகரித்து, அவர்களை அழைத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், 'மோசடி புகார...