பெரியாரிஸ்டுகளின் சோத்தில் உப்பு இருக்கா?
பெரியாரிஸ்டுகளின் சோத்தில் உப்பு இருக்கா?
தமிழகத்தில் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் பெரியாரிஸ்ட்டுகள். இவர்களுக்கு அரசியல் ரீதியாக பெரிதும் துணை நிற்பது திமுக.
திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடவுள் மறுப்பு கொள்கை பற்றியும் பெரியார் சித்தாந்தங்கள் பற்றியும் அரசியல் மேடைகளில் பலமுறை பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பெரியார் இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். அதேபோல் பெரியார் இயக்கங்களும் திமுக உடன் மிகவும் நெருக்கமாகவும் அரசியல் ரீதியான ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
பெரியார் இயக்கங்கள் தமிழகத்தில் கடவுள் பக்தி பற்றி பேசுபவர்களை ஏளனம் செய்வதும் கேலி கிண்டல்கள் செய்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். தீவிர பக்தி மார்க்க இயக்கங்களையே அவர்கள் விமர்சிப்பதும் கேவலமாக பேசுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் திமுக தலைவரின் மருமகனும் தமிழகத்தின் முடிசூடாய் இளவரசன் என்று வர்ணிக்கப்படும் திரு சபரீசன் அவர்கள் திருச்செந்தூரில் பக்தர்களை எல்லாம் காக்க வைத்துவிட்டு தனது செல்வாக்கை தவறாக பயன்படுத்தி சர்வநாச யாகம் என்ற ஒரு யாகத்தை நடத்தி சாமி கும்பிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதே விஷயத்தை வேறு ஏதாவது ஒரு கட்சியினரோ அல்லது அரசியல் இயக்கத்தினரோ செய்திருந்தால் வாய் கிழிய பேசும் பெரியாரிஸ்டுகள் இப்போது வாயில் எதை வைத்துள்ளனர் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
இந்த விஷயத்தில் பெரியாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வீரமணி சுபவி சுந்தரவல்லி மற்றும் பல பெரியாரிஸ்டுகள் தாங்கள் இருக்கும் இடம் தெரியாமல் எங்கேயோ ஒளிந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. தமிழகம் முழுவதும் சொல்வது போல் ஓசி சோத்துக்காக திமுக அறிவாலய வாசலில் நாய் போல் காத்து நிற்கின்றனரா? என மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
இது போன்ற யாகங்கள் நடத்துவது பெரியார் கொள்கைக்கு எதிரானது இல்லையா? பொதுவாக நம்முடன் நட்பில் இருப்பவர்கள் நம் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பவர்கள் திடீரென மாறிவிட்டால் சாதாரண மனிதன் எவனுக்கும் அவர் மீது கோபம் வரும். அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து ஏன் இப்படி திடீரென மாறி விட்டீர்கள் என்று கேள்வி கேட்பதும் கோபப்படுவதும் இயல்பு. ஆனால் திமுகவின் இந்த செயலை பெரியாரிஸ்டுகள் வாய் திறந்து கேள்வி கேட்க கூட திராணியில்லாத கோழைகளாக இருக்கிறார்கள் என்று மக்கள் நமக்கு சிரிப்பு சிரிக்கின்றனர்.

Comments
Post a Comment