சமூக நீதிக்காக போராடும் பெரியாரிஸ்டுகள் தற்போது ஏன் இந்துக்களின் சமூக நீதிக்காக போராடுவதில்லை?
பெரியாரும் பெரியார் இயக்க தலைவர்களும், உறுப்பினர்களும் எப்போதுமே சமூக நீதி குறித்து பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர்.
பழங்காலத்தில் இருந்த தீண்டாமை ஜாதி பாகுபாடு போன்ற பல விஷயங்களை எதிர்த்து குரல் கொடுத்து சமூக நீதியை நிலைநாட்டியவர்கள் பெரியார் இயக்கவாதிகள் என்றால் அது மிகை இல்லை.
குறிப்பாக பிராமணர்கள் சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை கடைபிடித்த போது பிராமணர்களுக்கு எதிராக பொங்கி போராட்டம் நடத்தியவர்கள் பெரியார் இயக்கவாதிகள்.
ஆனால் தற்போது நமக்குத் தெரிந்தவரை எந்த பிராமணர்களும் சாதிய பாகுபாடு தீண்டாமை கடைபிடித்ததாக எங்கேயும் பிரச்சனைகளும் அல்லது வழக்குகளோ கேள்விப்பட்டதில்லை. இன்னும் சில இடங்களில் சாதி பாகுபாடு சில குறிப்பிட்ட ஜாதிகளில் பார்க்கப்பட்டு வந்தாலும் அதுபோன்ற மற்ற ஜாதிகள் பார்க்கும் சாதி பாகுபாடு பற்றி பெரியார் இயக்க வாதிகள் பேசுவதும் இல்லை பெரிய போராட்டங்கள் எதுவும் நடத்துவதுமில்லை ஏனெனில் அவர்கள் இவர்களை விட வலிமையானவர்களாகவும் வன்முறையை கையாளக் கூடியவர்களாகவும் பெரியார் இயக்கவாதிகள் பயந்து பம்மி விடுவர்.
தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி நாட்களிலும் சரி மற்ற கோவில் விழாக்களிலும் சரி ஆன்மீக ஊர்வலங்கள் செல்லும் பொழுது சில இஸ்லாமியர்கள் தங்கள் தெருவுக்குள்ளோ தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் கோவில் ஊர்வலங்களும் சரி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சரி வர அனுமதிக்க மாட்டோம் என்று தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். இது போன்ற நவீன தீண்டாமையை தட்டிக் கேட்க திராணியில்லாத பெரியார் இயக்க வாதிகள் அவர்களிடம் மண்டியிட்டு நோன்பு கஞ்சி குடிக்க மட்டுமே செல்கின்றனர்.
நமது இந்திய தேசம் மதசார்பற்ற நாடாக இருப்பதால் எந்த ஆன்மீக ஊர்வலமும் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்லலாம் என்பது சட்டம். அப்படி இருக்கும் பொழுது எங்கள் பகுதிக்குள் இந்து கோவில் ஊர்வலங்கள் இந்து கடவுள்களின் ஊர்வலங்கள் வரக்கூடாது என இஸ்லாமியர்கள் தடுப்பது ஒரு வகை தீண்டாமை தானே?
வீர வசனம் பேசும் பெரியாரிஸ்ட்களுக்கு நெஞ்சில் துணிவும் ஆண்மை இருந்தால் இஸ்லாமியர்களை தட்டி கேட்டு இந்துக்களுக்கான நீதியை வாங்கிக் கொடுத்தால் உண்மையிலேயே பெரியாரும் பெரியார் இஷ்டங்களும் சமூக நீதியை காத்தவர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளலாம்.
எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டலிகளின் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் டெலிகிராம் பக்கங்களை பின் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#Pothigaitimes #Trending #Today #திராவிடர்கழகம் #திராவிடமாடல்
#சமூகநீதி #மதநல்லிணக்கம்
.jpeg)
Comments
Post a Comment