திமுக மத்திய அரசுடன் சமரசத்திற்கு முயற்சி செய்கிறதா?
_*அடிக்கும் அடி இனி பலமாக இருக்கும் திருட்டு திமுக மட்டும் அல்ல.., இந்தியாவில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளுக்கும் ....*_
_பிரதமரை சந்திக்க மீண்டும் முதல்வர் டெல்லிக்கு காவடி தூக்கியது ஏன்?_
_நான் நிதியின் மகன், எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் என்று குருமாவிடம் துண்டை போட்டு சத்தியம் செய்தவர் மோடியை சந்தித்தார். எதற்கு? செஸ் போட்டியை வந்து துவங்கி வைத்ததற்கு. அதைத்தான் அப்போதே சொல்லிவிட்டாயே? அதுவும் முழு பக்க விளம்பரம் கொடுத்த பின்னர் எதற்கு? ரொம்ப தேங்ஸ்ங்க.._
_இப்படி யாராவது மீண்டும், மீண்டும் காரணமில்லாமல் தேங்க்ஸ் சொல்லிட்டு மண்டய சொறிஞ்சா, அவர் ஏதோ நம்மிடம்_ _எதிர்பார்க்கிறார் என்பதே அர்த்தம். அதாவது சில வாரங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு என்று வீரவதேசமாக முழங்கி,_ _மோடியை விரட்டிய முதல்வர், ஏன் இவ்வளவு குன்றிய முதல்வராக பம்ம வேண்டும்?_
_*எலி எட்டு முழ வேட்டி கட்டினா என்ன அர்த்தம்?*_
_ஆம், நம்மிடம் 39 MP க்கள் இருந்தும், அதை வைத்து எதுவும் பயன் இல்லை. பார்லிமெண்ட் கேண்டீனில் கொட்டி உடம்பை வளர்க்க மட்டும்தான் முடிகிறது. இன்றைய நிலையில்,மோடியே மீண்டும் பிரதமராக வர வாய்ப்புகள் பிரகாசம் எனும்போது, ஜெயிலா, பெயிலா என இருக்கும் காங்கிரஸ் தலைமையை நம்மி என்ன பிரயோஜனம்?_
_இன்றைய சூழலில், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் நம்மால் 5 ஆண்டுகள் அரசை நடத்துவதே கடினம். *நாம் பாஜகவை எதிர்க்க, எதிர்க்க, அண்ணாமலை அடித்து ஆடுகிறார்.* அதனால் கட்சி பலமாக வளர்கிறது. நாம் அதிமுகவை கட்டு படுத்த முடிந்தாலும், இவர்களை ஒன்று செய்ய முடியாது. எனவே, அவர்களிடம் மோதி ஜெய்க்க முடியாது. சமரசமாக போவோம் என்பது மருமகனின் லாபி._
_இதில் அவர் எத்தனிப்பது, அடுத்த தேர்தலில் இதே பெர்ஃபார்மென்ஸ் காட்டினால், நாம் மத்திய அமைச்சரவையில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அவர்கள் கூட்டணியாக மாறினால் மட்டுமே அமைதியாக இருப்பார்கள். அதில் அவர் மத்திய மந்திரியாக ஒரு சீட்டாவது போட ஒரு வாய்ப்பு கிட்டும் என்ற நிலை._
_இதை புரிந்துகொண்ட கூட்டணி, குறுக்கு சால் ஓட்டி தூண்டி விட்டார். குருமா மேடையில் ஒரு சந்தேக தொனியில் பேச, விடிய, விடிய ராமாயணம் கேட்ட கதையாய், மத்திய அரசை எதிர்த்து பொங்கிவிட்டு டெல்லி சென்றார் முதல்வர்._
_பொதுவாக தான் ஆதரித்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே நேரில் சென்று வாழ்த்தும் கலாச்சாரத்தை கொண்ட திமுக, ஜனாதிபதி, உப ஜனாதிபதி அவர்களை நேரில் சென்று வாழ்த்தினார். அது என்ன நீட்டுக்காகவா? எதற்கும் இருக்கட்டும் என்ற முன்னெச்சரிக்கைதான். ஓட்டுப்போட்ட ரெட்டி, பட்நாயக் எல்லாம் கூட வாழ்த்தாதவர்களை வாழ்த்தினார் முதல்வர். அதன்பின், எது அரசியல், எது அட்மினிஸ்ட்ரேஷன் என்று குழம்பி தெரியாமல் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி!?! யார்ரா அவன் எழுதி கொடுக்காத கேள்விய கேட்டது? எழுதி கொடுத்தால் எந்த துண்டு சீட்ட படிக்கிறதுன்னு தெரியாதபவரிடம் இதை செய்வது நியாயமா? தர்மமா?_
_*பின்னர், மோடியை சந்தித்தார். பொதுவாக அவர்களுக்கு பொதுவாக பேசும் மொழி தெரியாதபோது, மொழி பெயர்ப்பாளர்களை அழைத்து செல்வது வழக்கம். அல்லது அவர்களின் தலைமை செயலாளரோ அல்லது டெல்லியில் இருக்கும் TR பாலு போன்றவர்களை உடன் அழைத்து செல்வது வழக்கம். கூட சென்ற செயலரை வெளியே அனுப்பிவிட்டு மோடியிடம் தனியாக பேசினார் மாண்புமிக முதல்வர். இவருக்கு இந்தி தெரியாது போடா, அவரோ தமிழ் தெரியாது வாடா? அப்புறம் என்ன பேசுவது.*_
_சில நேரஙகளில் கோரிக்கை மனுக்களை ஃபைலாக கொடுப்பது உண்டு. அதுவும் அவரிடம் இல்லை. சென்ற முறை லேப்டாப் கொண்டு சென்றார், இம்முறை அதுவும் இல்லை. அவரிடம் இருந்தது துண்டு சீட்டு மட்டுமே. ஆம், அங்கே பல ஃபோட்டோக்களை எடுத்தாலும், நல்ல ஒரு ஃபோட்டோவை ஷேர் செய்வார்கள். ஆனால் ஷோபாவின் நுனியில் பேய் அறைஞ்சவர் போல, கையில் துண்டு சீட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிடுகிறர்கள் என்றால் என்ன அர்த்தம்? ரேணுகொண்டா உனக்கு, கும்மிடிப்பூண்டி எனக்கு என்று விவேக் பானியில் பேசவா?_
_*அதாவது பாஜகவிடம் சமரசம் பேச சென்றவரை, வேப்பிலை அடித்து திருப்பி அனுப்பியுள்ளார்கள். சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தவரின் பாடி லாங்க்வேஜ் பாருங்க புரியும். அதுவும் அந்த போட்டோ உடனே தமிழ்க பாஜகவிற்கு ஷேர் செய்து சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதும்*_
_சரி, ஏன் மத்திய அரசிடம் சமரசம்?_
_தமிழ்நாட்டின் கடன் கிட்டத்தட்ட 6,90,000 கோடியாக உள்ளது. அது GSDP யில் 25% கடன் தொகையை தாண்டி உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் 40000 கோடிகள் கட்ட வேண்டியுள்ளது. இந்த கடன் தொகை இலங்கை வாங்கிய கடனை விட அதிகம். ஒரு மாநிலம் அதன் GSDP அளவை பொறுத்தே கடன் வாங்க முடியும். அதற்கு மேல் கடன் வாங்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒப்புதலை பெற்றால்தான் அது முடியும். சென்ற ஆட்சியில் எடப்பாடி கொரானாவை காரணம் காட்டி அந்த அளவை உயர்த்தி, அதில் பெரும்பங்கை கடனாக வாங்கிவிட்டு சென்றார். விடியல் ஆட்சி வந்தவுடன் மீதி இருந்த அனிமதிக்கப்பட்ட தொகையை வாங்கி முடித்து விட்டார்கள். இபபோது அரசின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியாத ஒரு சூழல்._
_என்ன செய்ய? கடன் அளவை மேலும் உயர்த்த அனுமதிக்க வேண்டும். அப்புறம் டெல்லிக்கு காவடி தூக்காமல் என்ன கத்தியவா தூக்கிட்டு போக முடியும்?_
_அதன் விளைவே தனியான சந்திப்பு. இவர் ஏதோ துண்டு சீட்ல கொண்டு போனத படிச்சிருப்பார். ஆனால் அவர் பதிலாக என்ன சொன்னாருன்னு இவரை கேட்டா என்ன தெரியும்? அவரிடம் என்ன துண்டு சீட்டா கேட்க முடியும்?_
_வானுக்கும், பூமிக்கும் குதிச்ச மம்தாவின் வாய்க்கு பூட்டு போட்டுட்டு கமுக்கமா நிருபர்களை சந்திக்காமல் வந்த நிலையில், இவர் எம்மாத்திரம். இவர் செல்வதற்கு முன்பாகவே, மருமகன் ஒரு நாள் முன்னதாக டெல்லி சென்றுவிட்டார். அவர் அமித்ஷாவை சந்திக்க பகீரத முயற்சி, ஆனால் சந்திக்க முடியவில்லை. அடுத்த நாள் வரை காத்திருந்தும் அனுமதிக்கப் படவில்லை. சோ மத்திய அரசு சமாதானத்தை ஏற்கும் நிலையில் இல்லை._
_பாஜகவை தாராளமாக எதிர்க்கலாம். எப்படியெனில் மாநில அரசின் நிதி நிலை நன்றாக இருந்து, நிர்வாகம் சிறப்பாக இருந்து, ஆட்சியாளர்கள் நேரடியாக ஊழல்கள் இல்லாமல் இருந்தால் நேரடியாக எதிர்க்கலாம். ஆனால் திமுகவின் ஊழல்தானே உலகத்திற்கே முன்னோடி. அப்புறம் வேறென்ன?_
_அது எல்லாம் இருந்தால் உத்தமன் வேஷம் போட்ட குஜ்லியே குத்த வச்சு உட்காந்திருக்க, திமுக என்ன செய்வது?_
_*மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர் மீதும் வழக்கு தொடரப்படவில்லை. ஏனெனில் எந்த வழக்குகள் போட்டாலும், சட்டத்திலிருக்கும் ஓட்டைகள் தப்பிக்க வழி கொடுத்துவிடும்*_. _8 ஆண்டுகளாகியும் இன்னும் உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸின் வீச்சு பலமாகவே இருக்கிறது. _அப்படியிருக்க 2ஜி முதல் எந்த கேஸும் தண்டனை பெற்று தந்து விட முடியாத சூழல் அப்போது._
_அதை வைத்து என்ன செய்ய? வழக்கு இருக்கும் வரை மிரட்ட மட்டுமே முடியும்!_
_எட்டு ஆண்டுகளில், அப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. திருத்தங்கள், போன்றவை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய நிலையில் ஊழல் மத்திய அரசில் மந்திரி சபையில் குறைவாக இருக்கலாம். ஆனால் மத்திய அரசின் அலுவலங்கள் உற்பட இன்னும் எல்லா அலுவலகங்களில் ஊழல் மண்டிக் கிடக்கிறது. ஆனால் அதை சம்பாதிக்கிறவர்கள் அதை முதலீடு செய்வது என்பது மிக கடினமாக்கப் பட்டுள்ளது. எப்படி?*_
_*1) Demonetization போது உங்கள் பண இருப்பு அரசின் கணக்கில் வந்து விட்டது.*_
_*2) Voluntary foreclosure எனும் திட்டத்தின் மூலம் ஏற்கனவே வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு, அதை பயன்படுத்திவிட்டார்கள்*_
_*3) தங்கத்தின் இருப்புகளை தெரிவிக்கின்ற திட்டத்தின் மூலம் அதுவும் செய்தாகிவிட்டது.*_
_*4) அன்றைய அசையா சொத்துக்கள் விபரம் ஏற்கனவே கணக்கில் உள்ளது. அவை இப்போது ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளாது.*_
_*அப்படியெனில் அந்த வருமானங்களை என்ன செய்வீர்கள்?*_
_அதைத்தான் மோடி சுதந்திர தின விழாவில் பேசினார். ஊழல் செய்ய முடியும், ஆனால் அதனால் வந்த வருமானத்தை மறைக்க முடியாது என்று. இப்போது உங்கள் வீட்டில் இருந்து சொத்து, தங்கம், பணம் என்று எதை எடுத்தாலும், அதற்கான வருமானத்திற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். எப்படி காட்ட முடியும்? *முன்பெல்லாம் ஒரு போலி பில் கொடுக்க வேண்டும் என்றால், எளிது. இன்று அதை கொடுப்பவர் அதற்கு GST கட்டியிருக்க வேண்டும். தொழில் செய்திருக்கிறேன் என்றால், என்ன தொழில், GST நம்பர் என்ன? எவ்வளவு பரிவர்த்தனை? அதிகமாக காட்டினால் அத்ற்கான ஆதாரம் என்ன? கட்டிய GST க்கும் வாங்கிய பொருளுக்கும் டேலி ஆகிறதா?*_
_இப்படி ஒவ்வொரு வகையிலும் அதை செய்ய முடியாத ஒரு சூழல். ஆனால் செய்ய முடியவே முடியாதா என்றால், சினிமா எடுக்கலாம், மொரீசியஸ் தீவில் ஹவாலா மூலம் ஒரு ஷெல் கம்பெனி மூலம் இந்திய சந்தைகளில் முதலீடு செய்யலாம். வெளி நாட்டு வங்கிகளில் செலுத்தலாம். ஆனால் எத்தனை பேரால் அதை செய்ய முடியும்? ஆனால் இன்று இந்திய அரசின் ஆளுமை, எந்த அரசிடமும் அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழலில் அவை பற்றிய விபரங்களை பெற முடியும்_.
_இங்கு நாம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் வரும் லாபத்திற்கு வரி கட்ட வேண்டும். ஆனால் மொரீஷியஸிலிருந்து Pronote மூலம் முதலீடு செய்தால் அது யாருடையது என்று கேட்பதும் இல்லை, அதற்கான வரியும் இல்லை. அந்தப்பணம் இந்தியர்களுடையதுதானே.. இது அரசுக்கு தெரியாதா? ஏன் அதை செய்யாமல்,முடக்காமல் வைத்திருக்கிறார்கள்?_
_*"ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குகாம் கொக்கு". மத்திய அரசு காத்திருக்கிறது.*_ _மருமகனில் வீட்டில் ரெய்டு செய்தார்களே, ஒன்றும் கிடைக்கவில்லையே?!? ஆனால் அன்று அவர்களிடம் இருந்தது என்ன என்பது தெரியுமல்லவா? இன்று ஊர் முழுதும் ரியல் எஸ்டேட், உலகம் முழுதும் சினிமா என்று எதை எடுத்தாலும் அதற்கான கணக்குகள் வேண்டுமே!? நன்கு சம்பாதிக்க அனுமதிக்கிறார்கள்._
_*அநேகமாக முதலில் விழும் குடும்பம் இத்தாலி குடும்பமாக இருக்கலாம். நெஷனல் ஹெரால்ட் கேசில் அவர்கள் ஊரை விட்டு ஓட வாய்ப்புகள் உண்டு*_. _மம்தா ஏற்கனவே சரண்டர், ஆனால் முடிச்சுகள் இருகுகிறது. குஜிலியின் ஆட்டம் முடிகிறது. கேரளாவில் பிண ராயின் ஆட்டம் தங்க மங்கையால் டப்பா டேன்ஸ் ஆடிக்கொண்டுதானே இருக்கிறது._
_*அதில் அடுத்து மாட்டப்போகும் செல்லக்குட்டி நம்ம ஓங்கோல் ராஜ குடும்பமாகத்தான் இருக்கும். அது சமீபத்தில் துபாய் முதலீடுகள் முதல் பல கைக்குள் அடக்கம். பல அமைச்சர்கள் இன்று வழக்குகள் நிலுவையில்.*_ _அதுவும் அவர்களுக்கு வருமானம் எதுவும் இல்லமல் எல்லாம் ராஜ குடும்பம் அடிப்பதில் சொல்லனா கோபம்! இது எல்லாம் எதில் முடியும், காட்டி கொடுப்பது மட்டுமல்ல.._
_காவடி மட்டுமல்ல, கரகாட்டமே ஆடினாலும் கரைசேர்வது கடினமே!_, _*கூடுதல் தகவல்*_ _இவர்களின் பினாமிகளும் தப்பிக்க வாய்ப்பேயில்லை , உப்பை தின்றுவிட்டிர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்_
_*இந்தியன்..*_
#பொதிகைடைம்ஸ் #செய்திகள்
#Pothigaitimes #trending #today #vairal #DMKFails #DravidaModel #நியூஸ்

Comments
Post a Comment