தலைவர்களை நினைவாக நினைவுச் சின்னங்கள், சிலைகள் அமைப்பது தேவையா?


 தலைவர்களை நினைவாக நினைவுச் சின்னங்கள், சிலைகள் அமைப்பது தேவையா?

நமது நாட்டில் எப்போதும் அரசியல் தலைவர்கள் மகான்கள் சித்தாந்தவாதிகள் ஆகியோருக்கு சிலை மற்றும் நினைவு சின்னங்கள் எழுப்பி அவர்கள் நினைவாக அவை பராமரிக்கப்பட்டு வருகிறது.


இது போன்ற சிலைகள் மற்றும் நினைவகங்கள் அமைக்கப்பட அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரி வருவாய் செலவு செய்து அமைத்து வருகிறது.


இவ்வாறு சிலைகள் மற்றும் நினைவகங்கள் அமைப்பது அத்தலைவரின் போற்றுவதாகவும் அவர்கள் சாதனைகளை எடுத்துரைப்பதாகவும் இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு செலவு செய்யாமல் இது போன்ற நிலங்களில் செலவு செய்யும் போது அரசின் உதவி எதிர்பார்த்து காத்திருக்கும் அடித்தட்டு மக்களும் மற்றும் அரசு மேம்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இது போன்ற செலவினங்கள் தேவையா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.


தற்போது பல தலைவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவராகவே இருக்கிறார். இதனால் மக்கள் தலைவரின் சிலை அல்லது நினைவிடத்தை பார்க்கும் போது அது கட்சிக்கான விளம்பரம் ஆகவே பார்க்கப்படுகிறது.


எனவே இது போன்ற சிலைகளை அல்லது நினைவிடங்களை இனி அரசமைக்காமல் அத்தலைவர் சம்பந்தப்பட்ட கட்சி நிதியிலிருந்து அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் போதும் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.


அரசு இதுபோன்ற நினைவிடங்களுக்கு செலவிடும் பெரும் தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்குக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கு கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்