சீன விசா வழக்கில் கார்த்திக் சிதம்பரம் கைதாவாரா?

 



2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் இன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் திரு சிதம்பரம் அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தபோது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனத் தொழிலாளர்களுக்கு விசா வாங்கி கொடுத்த வழக்கு நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள Talwandi Sabo Power Limited (TSPL) என்ற மின் நிலையத் திட்டத்தில் பணியாற்ற, 263 சீன தொழிலாளர்கள் இந்தியா வர வேண்டியிருந்தது.

அந்த காலகட்டத்தில் சில சீன ஊழியர்களின் விசா காலாவதியான பின்னரும், மீண்டும் (reuse) விசா அனுமதி பெறுவதில் சட்ட விதிகளை மீறி தலையீடு செய்யப்பட்டதாக விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. விசா மறுபயன்பாட்டு அனுமதியைப் பெற உதவியதற்காக ₹50லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


கார்த்திக் சிதம்பரம் உட்பட பலர் மீது charge sheet தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். இது அரசியல் பழிவாங்கல் என்றும், சட்டப்படி தன்னை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இந்த வழக்கை அரசியல் நோக்கத்துடன் தொடரப்படும் விசாரணை என குற்றம்சாட்டுகிறது. மறுபுறம், ஆட்சியில் உள்ள தரப்பு சட்டம் தனது வேலையை செய்கிறது என வாதிடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் சூழலில்,இந்த வழக்கு தமிழ்நாடு அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.



Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்