திமுக வாக்கு வங்கி சரிவு காரணம் என்ன?
தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் எதிர்வினைகள் என பல இடங்களிலும் பிரச்சனைகள் நடந்து வருகின்றன.
மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரவலாக வரும் கருத்துக்கள் அனைத்தும் திமுகவுக்கு வாக்கு வங்கி பெரிய அளவில் சரிந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
எதற்கும் முக்கிய காரணமாக கூறப்படுபவை
1 திமுக கொடுத்த நவீன எதிர்பார்ப்பு கொண்ட தேர்தல் அறிக்கை மற்றும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். இவை மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்த போராட்டங்களை தூண்டி விடுவதும் அவற்றிற்கு மறைமுகமாக நிதி உதவி செய்தது மக்களிடம் தேவை இல்லாத பயத்தையும் பீதியையும் உருவாக்கி அரசியல் செய்ததை இப்போது எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு செய்கின்றனர்.
3 பொதுவாக திமுகவில் உள்ள பலரும் மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டன் வரை நாகரீகம் அற்ற முறையிலும் அராஜகமாகவும் பேசி மக்களின் வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.
4 மேலும் திமுகவில் அறிவாளிகளையும் புத்திசாலிகளையும் நல்ல பதவிகளிலோ அல்லது நிர்வாகத்திலோ பங்கெடுக்க விடுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு புத்திசாலிகள் எங்கே தங்களை வீழ்த்தி கட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றி விடுவார்களோ என்ற பயம் உள்ளது. இதனால் திறமை அற்றவர்களை வைத்து நடத்தும் நிர்வாகம் தோல்வியில் முடிகிறது.
5 திமுக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. எடுத்துக்காட்டாக உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் சிறப்பு ஓய்வூதிய திட்டம் என அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. தற்போது கடைசியாக நம்பிய பராசக்தி படமும் மண்ணைக் கவ்வி விட்டது.
6 தற்போதைய கால நிலவரம் என்ன என்பதே தெரியாமல் ஏதோ உலகிலேயே சிறப்பாக ஆட்சி செய்வது நான்தான் என்று நினைப்பிலேயே திரு ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
7 தமிழகம் முழுவதும் அளவுக்கு அதிகமான கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கமும், மது விற்பனை அதிகரிப்பும் தாய்மார்கள் மத்தியிலும் மகளிர் மத்தியிலும் திமுக மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
8 கடந்த காலங்களில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை கணக்கில் எடுக்கும் போது திமுக அரசின் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
9 திமுக தொடர்ந்து சிறுபான்மையினரின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி தேவை இல்லாமல் இந்துக்களை சீண்டி தங்கள் வாக்கு வங்கியை கெடுத்துக் கொண்டது. இதே நிலை தொடர்ந்து காங்கிரசின் கதி தான் திமுகவுக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
10 மேலும் திமுக தலைமையில் தொடங்கி உள்ளாட்சி கவுன்சிலர் வரையிலான பல இடங்களிலும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன. இது போன்ற காரணங்களால் தான் திமுக பெரும் பின்னணிவை சந்தித்து வருகிறது.








Comments
Post a Comment