கார் டிக்கியில் அமர்ந்து பயணித்த இளைஞர்கள்!!!

 

கார் டிக்கியில் அமர்ந்து பயணித்த இளைஞர்கள்!!!

வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு!!!


தென்காசி பகுதியில் நான்கு சக்கர வாகனத்தின் டிக்கியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S.மாதவன் T.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், மேற்படி நான்கு சக்கர வாடகை வாகனத்தில் திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு ஓர் குடும்பத்தை அழைத்து வந்ததாகவும் 

அவ்வாறு வரும் வழியில் இது போன்ற பயணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபோன்று அபாயகரமான முறையில் பயணம் செய்வதை அனுமதித்த திருநெல்வேலி, பேட்டை பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ராஜசேகர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

வாகனத்தை அதிவேகமாகவும், ஆபத்தான முறையில் இயக்குதல், 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மேலும் சாலை விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

சாலை விதிகளை மதித்து விபத்தில்லா பயணம் செய்வோம்...

#TenkasiDistrictPolice #tenkasi #courtallam #tourism #tirunelvelidistrictpolice #tirunelveli

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்