மனைவியை கவனிக்காத மனித மிருகம்

 


7-வது முறையாக கர்ப்பமான மனைவி; உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத கணவன்; முதுகில் இருந்த காயம் புழுவிட்டு அழுகிய நிலையில், க*ருப்பையில் தொற்று பரவி பரிதாபமாக உ*யிரிழந்த சோகம்..!


கேரள மாநிலம் சாவக்காடு அருகே உள்ள எடக்காழியூரில் உள்ள அவர்களது வீட்டில், பி*ரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட உ*டல்நலக் குறைபாடுகளால் மனைவி உ*யிரிழந்தது தொடர்பாக, ஒரு அக்குபஞ்சர் நிபுணரை சனிக்கிழமை அன்று காவல்துறை கைது செய்தது.


அவர் தனது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.


முஹ்சினா (37) என்பவரின் மரணம் தொடர்பாக கல்லுவலப்பில் இப்ராஹிம் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். சாவக்காடு காவல் நிலைய ஆய்வாளர் ராஜீவ் என்.எஸ்., குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து, அவர் மீது கொ*லை வழக்குப் பதிவு செய்தார்.


பிரசவத்திற்குப் பிந்தைய கவனிப்பின்மையே அப்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என பி*ரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் க*ருப்பையிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் தொற்று ஏற்பட்டிருந்தது. அவரது முதுகில் இருந்த கா*யத்தில் புழுக்கள் நிறைந்திருந்தன.


முஹ்சினா, ஜனவரி 10 அன்று தனது ஏழாவது பிரசவத்திற்குப் பிறகு, வியாழக்கிழமை அன்று உ*யிரிழந்தார். பிறந்த நான்கு நாட்களுக்குள் குழந்தையும் இ*றந்துவிட்டது. அவர்களது இரண்டு குழந்தைகள் முன்னரே இ*றந்துவிட்டன.


கடந்த ஜனவரியில் முஹ்சீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்து 6-வது நாளில் உ*யிரிழந்தது.


புதுப்பொன்னானியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலக்கல் ஹம்சத் முகமது, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இ*றந்துவிட்டதாகக் கூறி சாவக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 


இப்ராஹிம் அக்குபஞ்சர் சிகிச்சையையே பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மிகக் கொடூரமான துன்புறுத்தலுக்கு முஹ்சீனா ஆளானார் என்று அவரது குடும்பம் கு*ற்றம் சாட்டியுள்ளது. 


கணவர் இப்ராஹிம் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். நல்ல மருத்துவ வசதிகள் இருந்தும், அசாதாரண மற்றும் முறையற்ற சிகிச்சை முறைகள் மூலம் தாய் மற்றும் குழந்தையின் உயிரை பறித்த இந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.


இது பற்றிய உங்க கருத்து என்ன?

Comments

சமீபத்திய செய்திகள்

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

இதுபோன்ற குற்றவாளிகளை என்ன செய்யலாம். உங்கள் கருத்து என்ன?