புளியங்குடியில் மனதை வேதனை பட வைக்கும் சோக சம்பவம்
புளியங்குடியில்
பள்ளி மாணவிகளின் மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழப்பு பெற்றோர்கள் கொதிப்பு 5 மணி நேரம் சாலை மறியல்
பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் வராததால் சம்பவம் நடந்த பள்ளிக்கு திடீரென திரண்டு பள்ளியின் மீது கற்கள் வீசி பரபரப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி வேல்மகில் தம்பதியரின் ஒரே மகள் சிவயாழினி (4) பள்ளியில் யுகேஜி படித்து வந்தார் மாலை வீட்டிற்கு செல்வதற்கு பள்ளி மைதானத்தில் மாணவி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த ஒரு கார் மாணவியின் மீது மோதியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த மாணவி சிவ யாழினி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிவ யாழினி பரிதாபமாக இறந்து போனார்
இந்நிலையில் மாலை நேரத்தில் பள்ளியில் பஸ்ஸில் மாணவி வீட்டுக்கு வராமல் அவளுடைய புத்தகப் பைகள் மட்டும் வந்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் எங்கள் குழந்தை எங்கே என கேட்டதற்கு உடன் வந்த பள்ளி மாணவிகள் யாழினி மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் விபத்தில் சிக்கிவிட்டதாக தகவல் தெரிவித்தனர் அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து வந்து பள்ளி வளாகத்திற்குள் என்ன நடந்தது என கேட்டபோது பள்ளி மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் அக் கிராமத்தைச் சேர்ந்த அவர்களது உறவினர்கள் பொதுமக்கள் தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைக்கு விபத்து ஏற்படுத்தியதற்கு காரணமான கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கைது செய்ய வேண்டும் எனக் கூறியும் குழந்தை இறப்புக்கு நீதி வேண்டும் என கோரியும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரும் வரை நாங்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட போவதாக கூறி சுமார் 5மணி நேரமாக மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் திடீரென கிளம்பி நூற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள சம்பவம் நடந்த கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு திரண்டு சென்றனர் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் பள்ளியின் வளாகத்துக்குள் சரமாரியாக கற்களை வீசினார் இதனால் பள்ளியின் பெயர் பலகை பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையம் அருகில் உள்ள கண்ணா மருத்துவமனை ஆகியவற்றின் மீது கற்கள் வீசப்பட்டது அதற்குப் பிறகு போலீசார் அங்கிருந்து அனைவரையும் களைந்து போக செய்தனர் அதன் பின்னர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் அதர் பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் பேச்சுவார்த்தை நடத்தினார் அதிலும் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் மறியலில் இடப்பட்டது ஆறு மணி நேரம் தொடர்ந்து மறியல் நடைபெற்று வருகிறது போக்குவரத்து அனைத்தையும் 30 கிலோமீட்டர் சுற்றி மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது




Comments
Post a Comment