தமிழ்நாட்டில் சட்ட விரோத ஊடுருவல்

 


"என்ன கொடுமை இது"- சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து போலி பாஸ்போர்ட், ஆதார் அட்டை வாங்கி சென்னை ஆயிரம்விளக்கில் பல ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வந்த வங்கதேசத்தை சேர்ந்தவன் கைது..!


சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) அதிகாரிகள், வங்காளதேச குடிமகனான முகமது ஹருன் மாய் (44) என்பவனை நகர காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 


அவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்து, வங்காளதேச குடியுரிமையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


விசாரணையில் அவன் 1999 ஆம் ஆண்டு திரிபுரா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பின்னர் வேலைக்காக இந்தியாவுக்கு அடிக்கடி பயணம் செய்ததாக தெரியவந்தது.


2022 ஆம் ஆண்டில், அவர் தனது வங்காளதேச பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு வந்து, நகரத்தில் உள்ள ஆயிரம் விளக்குகளில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பணிபுரிந்தான். 


தற்போது அவன் அதே பகுதியில் ஒரு பிரியாணி கடைக்கு முதலாளி ஆகிவிட்டான்


இறுதியில் தனது வங்காளதேச குடியுரிமையை மறைத்து ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையைப் பெற்றான். மேலும் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட்டைப் பெற்றான்.


போலீஸ் விசாரணையின் போது முகமது ஹருன் மாய் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது மாமாவின் மகன் வலியுல்லா கான் 2025 ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து திரிபுரா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 


முகமது ஹருன் மாய் வலியுல்லா கானை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, பிரியாணி கடையில் வேலை கொடுத்து, அதே அறையில் தங்க அனுமதித்துள்ளான். 


வலியுல்லா தனது அடையாளத்தை மறைத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காக பாபுல் ஹுசைன் என்ற பெயரில் ஆதார் அட்டையை தயாரித்தான்.


இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.


இவர்களுக்கு ஆயிரம்விளக்கு பகுதியில் வேலையும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த நபர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை..?


இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக வங்கதேசத்தவர் ஊடுருவி உள்ளார்கள். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வங்கதேசத்தவர் உள்ளார்கள்.


சமீபத்தில் கூட திருப்பூரில் வங்கதேச தீ*விரவா*திகள் 6 பேர் பதுங்கி இருந்து பாகிஸ்தான் தரப்புடன் சேர்ந்து நாசவேலைக்கு திட்டமிட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய தா*க்குதலை நடத்த இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெல்லி போலீசார் தமிழகம் வந்து இவர்களை கைது செய்தனர்.


உடனடியாக தமிழக போலீசார் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநிலத்தவரின் ஆவணங்களை சோதனை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இல்லையெனில் இங்குள்ள பெண்களை மணந்து கொண்டு தமிழகத்தில் செட்டிலாகி விடுவர். இதனால் தமிழகம் வருக்காலத்தில் வங்கதேசத்தவர் மயமாக மாறிவிடும்.


இது பற்றிய உங்க கருத்து என்ன?

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்