கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்

 


*கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்* 


கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது  சாலையில் நின்று கொண்டிருந்த  சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பெயரின் முகப்பு பகுதி முழுவதுமாக சிதைந்து சேதமடைந்தது. இதில் ஆம்னி டிரைவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.  காயமடைந்த ஆம்னி பேருந்து டிரைவர் பேருந்து முன் பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று  சிக்கி தவித்த டிரைவரை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து  போக்குவரத்தினை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்