2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது.
இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர்.
அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தாலே எளிதாக வாக்குகளை பெற்று விடலாம் என்பதை புரிய வைத்துள்ளனர்.
இதையெல்லாம் கடந்த கழக இயக்கங்கள் சரிவரச் செய்யாததால் தான் ஆட்சியை புதிதாக வந்துள்ள ஒரு கட்சியிடம் இழந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்த உடனே மக்களை மதிக்காமல் ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் நபர்களை அடக்கும் அடக்கு முறையையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்கள் முதலமைச்சர் போன்றவர்கள் ஆணவப் போக்குடன் நடந்து கொள்வதையும் மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் மதசார்பற்ற கூட்டணி சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் இந்து விரோத கருத்துக்களை தெரிவித்து பெரும்பான்மை மக்களை புறக்கணித்து சிறுபான்மை மக்களை தூக்கிக் கொண்டாடும் அரசியலின் எடுபட போவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளனர்.
இனி வரும் ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சியின் மீது வரும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் சரிவர ஆராய்ந்து அவற்றை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு குற்றம் குறை கூறுபவர்களையும் விமர்சிப்பவர்களையும் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாக்கினால் அவர்களது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளதாகவே இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment