திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

 


நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் 2026 இல் திமுக தனது ஆட்சியை தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியிடம்  இழந்து விட்டது.

 அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவினார். மேலும் பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.

 இது போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்கு காரணம் 

1 திமுக தனது ஆட்சிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தது போல மாய உலகத்தில் இருந்தது.

2 தனது ஆட்சியைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் யார் கூறினாலும் கூறினாலும் அல்லது சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடுத்தல் அவர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டு வந்தது. மாறாக அவர்கள் கூறும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடவே இல்லை.

3 மேலும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரை வாக்களித்த மக்களை துளியும் மதிக்காமல் மரியாதைக்குரியுடனும் ஏளனத்துடனும் ஒரு மன்னர் மனநிலையிலேயே அணுகி வந்தனர்.

4 திமுக எப்போதும் ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வந்தது. இதுவரை அதுவே அவர்களுக்கு வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி வருவதை  திமுக உணரவில்லை. தொடர்ந்து இந்துக்களை குறி வைத்து இந்து விரோத கருத்துக்களை பேசுவதை மக்கள் இரசிக்கவில்லை. 

5 சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதைப் பொருட்கள் அதிகரிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

6 தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்குவது குறித்த முறைகேடு பெரிய அளவில் மக்களால் விவாதிக்கப்பட்டது.



7 வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருகிறோம் என்று பல நாடுகளுக்கு சுற்றி திரிந்து வந்தும் எதிர்பார்த்தது போல் தொழில் முன்னேற்றமோ புதிய நிறுவனங்களோ வராததும், மேலும் google போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாடு விட்டு ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ததும் இவர்களது திறமையின்மையை காட்டுவதாக மக்கள் நம்பினர்.

8 மேலும் இளைய தலைமுறை அமைச்சர்களாக உள்ள உதயநிதி, அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா போன்றவர்கள் அரசியல் நாகரீகமும் அடிப்படைப் பண்பும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக கருத்துக்களைப் பேசித் திரிந்ததும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிராக பேசியதையும் மக்கள் சிறிதும் ஏற்கவில்லை.

9 திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு ஒத்து ஊதுவதை தவிர வேற எந்த உருப்படியான வேலையும் செய்யவில்லை. அரசு செய்யும் பல தவறுகளை சுட்டிக்காட்ட தவறிவிட்ட கூட்டணி கட்சிகளையும் மக்கள் நம்ப தயாராக இல்லை.

10 மேலும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சித் திட்டங்கள் கடைசி நேர பணப்பட்டுவாடா இவற்றின் மூலம் வென்று விடலாம் என்று திமுக தப்பு கணக்கு போட்டு விட்டது.

11 திமுகவின் இலவச பேருந்து திட்டமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

12 2021 இல் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலான முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. பல நிறைவேற்ற முடியாத ஏமாற்று வாக்குறுதிகளை கொடுத்து தங்களை வஞ்சித்து விட்டதாக அரசு ஊழியர் முதல் சாதாரண பொதுமக்கள் வரை அனைவரும் திமுகவை வசை பாடி வந்தனர்.

13 தமிழ்நாட்டின் கனிமை வளங்களை கட்டுக்கடங்காக கொள்ளை போனதையும் இதேநிலைத் தொடர்ந்தால் தமிழகம் விரைவில் அழியும் என்பதை மக்கள் உணர்ந்த தாளுமே திமுகவை புறக்கணித்தனர்.

14 இதுபோன்ற காரணங்களால் தான் இந்த முறை தேர்தல் அறிக்கையில் அவர்கள் கொடுத்த 8000 ரூபாய் கூப்பன் திட்டமும் ஏமாற்று வேலை என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.

 இதன் மூலம் தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு சிறந்த எதிர்க்கட்சியாகவும் மக்களுக்கு நல்ல முறையில் தொண்டுகள் செய்தும் எந்த மத உணர்வுகளையும் புண்படுத்தாமலும் நாவடக்கத்தோடு பேசி வந்தால் திமுக இதிலிருந்து மீண்டு வர வாய்ப்புள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்