புதிய தமிழக அரசு சந்திக்கப் போகும் சவால்கள்
தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் உள்ளது.
இந்த நிலையில் புதிய தமிழக அரசு அமைந்த உடன் அந்த அரசு சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
1 தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி வரை கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவது முதல் பிரச்சனையாக இருக்கும்.
2 தற்போதைய புதிய அரசு அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் என்பது அரசிடம் தற்போது இல்லாததால் பல வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதற்கும்.
3 தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் மூலம் மது விற்பனை நடைபெறுவதில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பதாக தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு விஜய் அவர்களே கூறியுள்ள நிலையில் அதனை சரி செய்வதும் சவாலானதாக இருக்கும்.
4 தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதை பழக்கங்களையும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை தடுப்பதும் மிகுந்த சவாலானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
5 இது எல்லாம் விட முக்கியமானது தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை சமாளிப்பது என்பது ஒரு பெரிய தலைவலியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில் திரு விஜய் அவர்கள் எங்கு சென்றாலும் அவரை தொடர்ந்து ஒரு பெரிய கூட்டம் பின் தொடர்ந்து செல்வதோடு சாலை விதிகள் உட்பட எந்த விதிமுறைகளையும் மதிக்காமல் தங்களுக்கென ஒரு ஒரு தனி உலகில் காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
6 தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் போதிய தரமான பேருந்துகள் பணியாளர்கள் இல்லாமல் கடன் சுமையில் தத்தளித்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் இலவச பேருந்து பயணம் மகளிர்க்கு அளிக்க வாக்குறுதி அளித்துள்ளது. இதனால் மேலும் பொது போக்குவரத்து முடங்கிய அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
7சர்வதேச தொழில் நுட்ப வளர்ச்சியாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் வரும் காலங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போகும். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
8 தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே இழப்புகளையும் வருமான குறைவையும் சந்தித்து வரும் நிலையில் தற்போது அனைவருக்கும் அரசின் வாக்குறுதியாக அனைத்து மின் இணைப்புகளுக்கும் 200 யூனிட் இலவசம் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதிலும் கடும் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இதுபோன்ற எண்ணற்ற சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் புதிய அரசு உள்ளது.
தற்போது தமிழக மக்கள் அனைவரும் ஆட்சி மாறிவிட்டது பாலாறும் தேனாறும் ஓடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பதால் பெரும் ஏமாற்றங்கள் அடையவும் வாய்ப்பு உள்ளது என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

.jpeg)
Comments
Post a Comment