Posts

தென்காசி அரசியல்வாதிகள் கனிவான கவனத்திற்கு

Image
தென்காசி பகுதி திருநெல்வேலியில் இருந்து பிரித்து மாவட்டமாகிய பிறகு பல பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல் திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.   இந்த விரிவாக்குப் பணிகள் 90% முடிந்து விட்ட நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் இன்னலுக்குள் ஆவதோடு தினசரி அந்த வழியாக பணி நிமித்தமாகவோ அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்களோ மேலும் பல சொந்தப் பணிகள் காரணமாக சென்று வருபவர்கள் என அனைவரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  குறிப்பாக திருநெல்வேலி இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.  தென்காசி பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது பற்றி எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க இதுவரை முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆளும்கட்சியினர் தவிர எதிர்க்க...

வங்கதேசத்தினர் ஊடுருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Image
  நமது இந்திய நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் திருநாமல்  காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பலவும் வாக்காளர் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.   இந்த தீவிர வாக்காளர் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்து போயிருந்தாலும் அல்லது மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலோ அவர்களது வாக்குரிமை பட்டியலில் இருக்கும். அவற்றை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் 18 வயதிற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பலர் சட்ட விரோதமாக அந்நிய நாட்டவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் அவற்றின் கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.  இதனால் பெரும்பான்மை பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உருவாகும். கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் சட்டவிரோத ஜனநாயக நடைமுறைகள் தடுக்கப்படும். பொதுமக்கள்...

அதிமுக உட் கட்சியின் பிரச்சனைகள் குழப்பங்களை தீர்த்து நீடிக்குமா?

Image
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் கட்சிகளில் ஒன்று அதிமுக.  எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு ஜெயலலிதா வழிநடத்தி தற்போது இபிஎஸ் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் தொடர்ந்து உள் கட்சி அரசியலில் குழப்பங்களை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கூவத்தூர் குழப்பங்களை தொடர்ந்து இபிஎஸ் அவர்கள் வசம் அதிமுக சென்றது. அப்போதே திருமதி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவை கைப்பற்ற பெருமுயற்சி எடுத்தும் அது பலன் இல்லாமல் போனது. அந்த சமயத்தில் இபிஎஸ் அவர்களை யாரும் ஒரு தலைவராகவோ ஆளுமையாகவோ பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் அப்போது வந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து சட்டப்பூர்வமாக கட்சியை தன் வசப்படுத்திக் கொண்டார்.  அதன் பின் இபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து கட்சியை ஒருமித்து நடத்தி வந்த நிலையில் அவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ் அவர்களும் கட்சியை விட்டு வெளியேறினார். அதிலும் எந்த பிரச்சனைகளும் வராமல் தனக்கு சாதகமாக  இபிஎஸ் அவர்கள் சாதுரியமாக நடந்து கொண்டார்.   தேர...

தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம்

Image
  நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவருக்கு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஓரளவுக்கு ஆதரவும் இருந்தது.  இதனால் அவர் நடத்தும் கட்சிக் கூட்டங்கள் மாநாடுகள் போன்றவற்றுக்கு மக்கள் கூட்டம் திரளாக வரத் தொடங்கியது. இந்நிலையில் கரூரில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஓடி ஒளிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ள நடிகர் விஜய் அவர்களும் தனது பனையூர் இல்லத்திலேயே இருந்தார். அவர்களுக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வரும்போது அதை எப்படி அரசியல் ரீதியாக கையாள வேண்டும். சிக்கலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அனுபவமும் சிந்தனையும் இல்லை. மேலும் விஜய் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மற்றவர்களை சார்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும் பொழுது தனது தந்தையின் நிழலிலேயே இருந்தார். அதன் பின்னர் பலரும் அவரைக் கைப்பாயாக உபயோகிக்க தொடங்கி விட்டனர். இது அவரால் உணரவும் முடியவில்லை. இ...

தமிழகம் எங்கே செல்கிறது? சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகிறதா?

Image
 தமிழ்நாட்டில் தற்போது சமூக விரோத செயல்கள் பாலியல் வன்கொடுமைகள் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஞானசேகரன் என்ற திமுக அனுதாபியால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையில் ஆரம்பித்து சிறுமி முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.   தற்போது கோவை மாவட்டத்தில் காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஹிட்லராக மாறுவேன் சர்வாதிகாரமாக நின்று வசனம் பேசிவிட்டு சட்டம் ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு காப்பேன் என்று டயலாக் எல்லாம் பேசிவிட்டு தற்போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை  சமீப காலங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதோடு பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.  இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு போதிய பாதுகாப்...

திமுக கையில் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வுகிறதா?

Image
 தமிழகத்தில் திமுகவிற்கு எப்போதெல்லாம் பின்னடைவு பிரச்சனைகள் எதிர்ப்புகள் போன்றவை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதனை மடை மாற்ற பல யுக்திகளை கையாளும்.  அவற்றில் முக்கியமானது இந்தி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, நீட் விலக்கு மற்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு மக்களுக்கு தங்கள் மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் சரி செய்ய இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும்.  அப்படி அவர்கள் சமீப காலங்களில் முயற்சி செய்த இந்தி எதிர்ப்பு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இவர்கள் செய்த அரசியல் எடுபடவில்லை.  தற்போது சென்னை சாலைகளில் நிலை, மழை வெள்ளம், விவசாய நெல் கொள்முதல், மற்றும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற இவர்களின் தவறுகளை மறைக்க இவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் SIR எனப்படும் வாக்காளர் சரி பார்க்கும் பணியை வைத்து ஒரு போராட்டத்தை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு.  தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக 2016ல் திமுக அரசே புகார் தெரிவித்து இருக்...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எழுச்சி

Image
  இந்தியாவில் எப்போதுமே விளையாட்டுக்களில் கிரிக்கெட்டுக்கு என்று தனி இடம் ஒன்று உண்டு.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி பார்த்து வந்தனர். பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்கள் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை பற்றி ஒருவருக்கும் தெரியாது.  ஆனால் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக பெண்கள் அணியிலும் சில வீரர்கள் பேசப்பட்டு வருகின்றனர். ரசிகர்களிடையே பெண்கள் கிரிக்கெட் பற்றியும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.  தற்போது நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் உள்ளது.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ளாக வந்துள்ள பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பொதிகை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  நமது இந்திய ரசிகர்கள் எப்படி கிரிக்கெட்டை பெரிதாக ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்களோ அதே போன்று ஆக்கி ஃபுட்பால் கபடி பேஸ்கட் பால் போன்ற அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தினால் இந்திய அனைத்து விளையாட...