கொங்கு மண்ணில் மண்ணைக் கவ்வுகிறதா? திமுக
சமீபத்தில் கொங்கு பகுதியில் விஜயம் செய்த ஸ்டாலினுக்கு கொங்கு பகுதி மக்கள் #Gobackstalin என்ற hastag உடன் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பலமுறை மோடி தமிழகத்திற்கு வரும் பொழுது தன்னுடைய இணைய உப்பிக்களை வைத்து மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்தியும் #GobackModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி மகிழ்ந்தனர்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதைப் போல தற்போது அவர்களுக்கே அது வினையாக இருக்கிறது.
தமிழகத்திற்கு பெரும்பான்மை வருவாய் கொங்கு பகுதியில் இருந்தே வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் கொங்கு பகுதியில் திமுகவுக்கு எப்போதுமே பெரிய செல்வாக்கு இருந்ததில்லை.
மேலும் திமுக கடந்த தேர்தலிலும் கொங்கு பகுதியில் சொற்ப இடங்களிலேயே வெற்றி பெற்றது. அதிலும் சில கட்சி மாறி வந்த தனிப்பட்ட செல்வாக்கு மிக்க வேட்பாளர்களால் சில இடங்கள் கிடைத்தது.
தற்போது திமுக ஆட்சியில் கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஒரு முகத்தை திமுக பிரமுகர் எங்களுக்கு ஓட்டு போடாத கொங்கு பகுதி மக்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்பது போல பேசியது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகியது.
அது மட்டுமில்லாமல் நீட் பிரச்சினை, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பழைய ஓய்வூதிய திட்டம், டாஸ்மாக்கை முழுமையாக மூடுவோம் என்று பல பொய் வாக்குறுதிகள் அளித்து அதை இன்று வரை நிறைவேற்ற முடியாமல் அரசு தோல்வியை தழுவியுள்ளது. இதனால் கொங்கு பகுதி மக்கள் ஸ்டாலின் அரசு மீது மிகுந்த விரக்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதெல்லாம் போதாது என்று தற்போது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் விரைவில் பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ள நிலையில் கொங்கு பகுதி மக்கள் முழுமையாக திமுக அரசை புறக்கணிக்க தயாராகி வருகின்றனர்.
அதன் வெளிப்பாடாகவே கோ பேக் ஸ்டாலின் ஆனதாக கோவை மாவட்ட பகுதிகளில் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் தற்போது தமிழக முழுவதிலும் திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்திலேயே இருப்பதாக தமிழக முழுவதிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் அரசின் நிர்வாகம் முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது என அரசியல் நோக்கங்களின் கருத்தும் நிலவுகிறது.
இதே நிலை நீடித்தால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்றாலும் திமுக வெற்றியை பெறுவது சாத்தியமில்லை என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.
எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பொதிகை டைம்ஸ் பேஸ்புக் பக்கத்தையும், ட்விட்டர், telegram மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பின் தொடரவும். உங்கள் ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#பொதிகை #டைம்ஸ் #பொதிகைடைம்ஸ்
#செய்திகள், #Today #Trending #vairal #gobackstalin
.jpeg)
Comments
Post a Comment