சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..!

 


சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..!


சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் ச*ட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, ப*யங்கரவா?த தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, போலீசார், நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, கொத்தனார் வேலை செய்து வந்த, வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம், 24, மசரூல், 20, ஆகியோரை கைது செய்தனர்.


இருவரும் முறையான அனுமதியின்றி, படகு வழியே மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக, தமிழகம் வந்தது தெரிய வந்தது. 


அவர்கள் இருவரையும், செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


அதேபோல், சமீபத்தில், செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம், 36, சஹாலல் இஸ்லாம், 26, ஹரிரூல் இஸ்லாம், 31, ஆகியோரையும், ப*யங்கரவா*த தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.


மேலும், ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த வங்காளதேச குடிமகனான முகமது ஹருன் மாய் (44), அவரது உறவினர் வலியுல்லாகான் என்பவனையும் சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். 


இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக வங்கதேசத்தவர் ஊடுருவி உள்ளார்கள். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வங்கதேசத்தவர் உள்ளார்கள்.


சமீபத்தில் கூட திருப்பூரில் வங்கதேச தீ*விரவா*திகள் 6 பேர் பதுங்கி இருந்து பாகிஸ்தான்  தரப்புடன் சேர்ந்து நாசவேலைக்கு திட்டமிட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய தா*க்குதலை நடத்த இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெல்லி போலீசார் தமிழகம் வந்து இவர்களை கைது செய்துள்ளனர்.


உடனடியாக தமிழக போலீசார் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநிலத்தவரின் ஆவணங்களை சோதனை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இல்லையெனில் இங்குள்ள பெண்களை மணந்து கொண்டு தமிழகத்தில் செட்டிலாகி விடுவர். இதனால் தமிழகம் வருக்காலத்தில் வங்கதேசத்தவர் மயமாக மாறிவிடும்.


இது பற்றிய உங்க கருத்து என்ன?

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்