பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்
தங்கப்பதக்கம் வாங்கிய பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. கடைசியில் "அதை" சொன்ன மாப்பிள்ளை! ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது படிப்பு, அந்தஸ்து என அனைத்தும் இருந்தும், ஒரு நபரின் பொறுப்பற்ற வார்த்தைகளால் ஒரு உயர்கல்வி மாணவி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரெஹானா.. நன்றாக படிக்கக்கூடியவர்.. முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று, ஆளுநரின் கைகளாலேயே கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவருக்கும், பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கைநிறையச் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை, தங்கப் பதக்கம் வென்ற மணமகள் என 12 வீட்டாருமே இந்தத் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருந்தனர். நிச்சயதார்த்தமும் முடிந்தது.. இதனால் ஆரம்ப நாட்க...