திமுகவின் இந்தி எதிர்ப்பு பித்தலாட்ட அரசியல்


 திமுகவின் இந்தி எதிர்ப்பு பித்தலாட்ட அரசியல்



[5:34 pm, 20/08/2022] Saffron Group: தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் எப்போதுமே தங்களுக்கு சிக்கலான நேரங்கள் வரும்பொழுது எடுக்கும் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று இந்தி எதிர்ப்பு.


ஆனால் திராவிட கட்சியுடைய முக்கிய தலைவர்கள் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது. மேலும் தீவிர ஹிந்தி எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொண்ட கருணாநிதி முரசொலி மாறன் போன்றவர்களின் வாரிசுகள் ஹிந்தி கற்று வட மாநிலங்களில் தங்கள் வியாபாரத்தையும் அரசியலையும் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.


மேலும் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட பொழுது ஹிந்தி எதிர்ப்பு என்பது கட்டாய திணிப்புக்கு மட்டுமே. தாங்களாக விருப்பப்பட்டு படித்தால் அது தினிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

நம்மை எவ்வாறு முட்டாளாக்குகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

திமுகவின் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் பணம் கட்டி ஹிந்தி படிக்க விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கொள்ள அனுமதி உண்டு.

ஆனால் ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடிமகனின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று விரும்பினாலும் அதை படிக்க விடாமல் தடுப்பது திராவிடத்தின் சூழ்ச்சியாகும்.

உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் அறிவுடன் தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை அப்படி இருந்தால் அரசு பள்ளிகளிலும் விருப்பமுள்ளவர்கள் மட்டும் ஹிந்தி படிக்க அனுமதிக்க வேண்டியது தானே?…

இதிலிருந்தே திமுகவின் மட்டமான இந்திய அரசியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனியாவது மக்கள் புரிந்து கொண்டு திமுகவை புறக்கணித்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வாய்ப்புள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்