கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு



  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் 

கடையநல்லூர் தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு நல்ல  பெயர் உள்ளது. இவர் தொகுதி மக்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் விதமாக செயல்படுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இவரால் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் மக்கள் அரசியல் காரணங்களால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மேலும் கனிம வளம் கொள்ளைக்கு எதிராக இவர் குரல் கொடுத்ததும் போராடியதும் மக்கள் ஆதரவு இவர் பக்கம் வந்துள்ளது. 


கடையநல்லூர் தொகுதி இஸ்லாமிய பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்தாலும் திமுக இஸ்லாமியர்களுக்கு ஆன அரசியல் சக்தி என்று பிரச்சாரங்கள் வைக்கப்பட்டாலும் இந்த தொகுதியை பொருத்தவரை திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர்.
எந்தத் தொகுதியைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலும் மற்றும் ஏனைய பல பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரிய வாக்கு வங்கி உள்ளது. இதில் திமுகவின் வாக்குகள் பெரும் பகுதியை தமிழக வெற்றி கழகம் பிரிக்கிறது. அதிமுகவின் வாக்குகளும் கணிசமான அளவு தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றாலும் திமுகவின் வாக்கு வங்கியே பெருமளவில் சரிகிறது என்பது உண்மை.

அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றாலும் பெரிய வாக்கு வித்தியாசங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் தமிழக வெற்றி கழகம் 20% வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்