Posts

தென்காசி அரசியல்வாதிகள் கனிவான கவனத்திற்கு

Image
தென்காசி பகுதி திருநெல்வேலியில் இருந்து பிரித்து மாவட்டமாகிய பிறகு பல பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல் திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.   இந்த விரிவாக்குப் பணிகள் 90% முடிந்து விட்ட நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் இன்னலுக்குள் ஆவதோடு தினசரி அந்த வழியாக பணி நிமித்தமாகவோ அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்களோ மேலும் பல சொந்தப் பணிகள் காரணமாக சென்று வருபவர்கள் என அனைவரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  குறிப்பாக திருநெல்வேலி இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.  தென்காசி பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது பற்றி எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க இதுவரை முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆளும்கட்சியினர் தவிர எதிர்க்க...

வங்கதேசத்தினர் ஊடுருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Image
  நமது இந்திய நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் திருநாமல்  காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பலவும் வாக்காளர் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.   இந்த தீவிர வாக்காளர் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்து போயிருந்தாலும் அல்லது மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலோ அவர்களது வாக்குரிமை பட்டியலில் இருக்கும். அவற்றை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் 18 வயதிற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பலர் சட்ட விரோதமாக அந்நிய நாட்டவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் அவற்றின் கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.  இதனால் பெரும்பான்மை பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உருவாகும். கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் சட்டவிரோத ஜனநாயக நடைமுறைகள் தடுக்கப்படும். பொதுமக்கள்...

அதிமுக உட் கட்சியின் பிரச்சனைகள் குழப்பங்களை தீர்த்து நீடிக்குமா?

Image
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் கட்சிகளில் ஒன்று அதிமுக.  எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு ஜெயலலிதா வழிநடத்தி தற்போது இபிஎஸ் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் தொடர்ந்து உள் கட்சி அரசியலில் குழப்பங்களை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கூவத்தூர் குழப்பங்களை தொடர்ந்து இபிஎஸ் அவர்கள் வசம் அதிமுக சென்றது. அப்போதே திருமதி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவை கைப்பற்ற பெருமுயற்சி எடுத்தும் அது பலன் இல்லாமல் போனது. அந்த சமயத்தில் இபிஎஸ் அவர்களை யாரும் ஒரு தலைவராகவோ ஆளுமையாகவோ பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் அப்போது வந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து சட்டப்பூர்வமாக கட்சியை தன் வசப்படுத்திக் கொண்டார்.  அதன் பின் இபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து கட்சியை ஒருமித்து நடத்தி வந்த நிலையில் அவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ் அவர்களும் கட்சியை விட்டு வெளியேறினார். அதிலும் எந்த பிரச்சனைகளும் வராமல் தனக்கு சாதகமாக  இபிஎஸ் அவர்கள் சாதுரியமாக நடந்து கொண்டார்.   தேர...

தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம்

Image
  நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவருக்கு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஓரளவுக்கு ஆதரவும் இருந்தது.  இதனால் அவர் நடத்தும் கட்சிக் கூட்டங்கள் மாநாடுகள் போன்றவற்றுக்கு மக்கள் கூட்டம் திரளாக வரத் தொடங்கியது. இந்நிலையில் கரூரில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஓடி ஒளிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ள நடிகர் விஜய் அவர்களும் தனது பனையூர் இல்லத்திலேயே இருந்தார். அவர்களுக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வரும்போது அதை எப்படி அரசியல் ரீதியாக கையாள வேண்டும். சிக்கலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அனுபவமும் சிந்தனையும் இல்லை. மேலும் விஜய் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மற்றவர்களை சார்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும் பொழுது தனது தந்தையின் நிழலிலேயே இருந்தார். அதன் பின்னர் பலரும் அவரைக் கைப்பாயாக உபயோகிக்க தொடங்கி விட்டனர். இது அவரால் உணரவும் முடியவில்லை. இ...

தமிழகம் எங்கே செல்கிறது? சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகிறதா?

Image
 தமிழ்நாட்டில் தற்போது சமூக விரோத செயல்கள் பாலியல் வன்கொடுமைகள் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஞானசேகரன் என்ற திமுக அனுதாபியால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையில் ஆரம்பித்து சிறுமி முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.   தற்போது கோவை மாவட்டத்தில் காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஹிட்லராக மாறுவேன் சர்வாதிகாரமாக நின்று வசனம் பேசிவிட்டு சட்டம் ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு காப்பேன் என்று டயலாக் எல்லாம் பேசிவிட்டு தற்போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை  சமீப காலங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதோடு பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.  இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு போதிய பாதுகாப்...

திமுக கையில் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வுகிறதா?

Image
 தமிழகத்தில் திமுகவிற்கு எப்போதெல்லாம் பின்னடைவு பிரச்சனைகள் எதிர்ப்புகள் போன்றவை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதனை மடை மாற்ற பல யுக்திகளை கையாளும்.  அவற்றில் முக்கியமானது இந்தி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, நீட் விலக்கு மற்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு மக்களுக்கு தங்கள் மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் சரி செய்ய இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும்.  அப்படி அவர்கள் சமீப காலங்களில் முயற்சி செய்த இந்தி எதிர்ப்பு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இவர்கள் செய்த அரசியல் எடுபடவில்லை.  தற்போது சென்னை சாலைகளில் நிலை, மழை வெள்ளம், விவசாய நெல் கொள்முதல், மற்றும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற இவர்களின் தவறுகளை மறைக்க இவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் SIR எனப்படும் வாக்காளர் சரி பார்க்கும் பணியை வைத்து ஒரு போராட்டத்தை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு.  தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக 2016ல் திமுக அரசே புகார் தெரிவித்து இருக்...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எழுச்சி

Image
  இந்தியாவில் எப்போதுமே விளையாட்டுக்களில் கிரிக்கெட்டுக்கு என்று தனி இடம் ஒன்று உண்டு.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி பார்த்து வந்தனர். பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்கள் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை பற்றி ஒருவருக்கும் தெரியாது.  ஆனால் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக பெண்கள் அணியிலும் சில வீரர்கள் பேசப்பட்டு வருகின்றனர். ரசிகர்களிடையே பெண்கள் கிரிக்கெட் பற்றியும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.  தற்போது நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் உள்ளது.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ளாக வந்துள்ள பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பொதிகை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  நமது இந்திய ரசிகர்கள் எப்படி கிரிக்கெட்டை பெரிதாக ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்களோ அதே போன்று ஆக்கி ஃபுட்பால் கபடி பேஸ்கட் பால் போன்ற அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தினால் இந்திய அனைத்து விளையாட...

இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவை ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறதா?

Image
 இந்திய பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.  இப் போட்டியில்  337 என்ற பெரிய இலக்கை எதிர்நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பின்பு ஜெமிமா மற்றும் இந்தியனின் கேப்டன் ஹர்மன் பிரீத்  கவுர் இருவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றிக்கு அடித்தளம் இட்டனர்.  மேலும் ரிச்சா, ஸ்ரீமித்தி மந்தனா, தீப்தி ஷர்மா போன்றோரின் ஆட்டமும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணியின் ரன் ரேட் உயர்ந்தது.   இந்தப் போட்டியை பொருத்தவரை ஜெமிமா மிகச்சிறப்பாக ஆடினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருடைய பங்களிப்பு இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஆனால் நேற்று முதல் எல்லா சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஜெமிமா மட்டுமே இந்த வெற்றிக்கு காரணம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு யூடியூப் அவர்களும் சமூக வலைத்தள வாசிகளும் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்த்த பயன்படுத்திக் கொள்கிறார்களோ என...

இரட்டை வேடம் போடுகிறாரா கனிமொழி?

Image
  திமுகவில் உள்ள தலைமை குடும்பத்தில் நிர்வாக திறனும் ஆளுமையும் அரசியல் தந்திரங்களும் அதிகம் தெரிந்த ஒரே தலைவர் என்றால் திருமதி கனிமொழி அவர்கள் மட்டுமே.  கனிமொழி அவர்கள் அரசியலில் ஓரளவுக்கு குறைந்தபட்ச நாகரிகத்தை கடைபிடிக்கும் திமுக அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.  ஆனால் அவரும் பல தேர்தல்களில் பல பொய்யான வாக்குறுதிகளை அழிக்க காரணமாக இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டின் திமுக அரசின் தேர்தல் அறிக்கை தயாரித்த முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.  திருமதி கனிமொழி அவர்கள் 2016 தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது கட்சி உறுப்பினர்களோ தலைவர்களோ யார் மதுபான ஆலை நடத்தினாலும் அது மூடப்படும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஆவண செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக மக்கள் மதுவால் இருந்ததாகவும் இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.   அதேபோல் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது சுங்க கட்டணம் ரத்து கேஸ் சிலிண்டர் ...

வாக்குத் திருட்டு. எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா?

Image
  எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்திருக்கும் முக்கிய ஆயுதம் ஓட்டு திருட்டு.  கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மதில் ஆட்சி செய்து வரும் பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லாத போது தற்போது அவர்கள் தேடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் வாக்குத் திருட்டு.  இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே வாக்காளர் பட்டியலில் சில குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தற்போது தொழில்நுட்பங்கள் பலவகையிலும் வளர்ந்து விட்ட பின்பும் நமது வாக்காளர் பட்டியில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.அதை தற்போது சரி செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.   அதற்கு தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பொழுது அந்தக் குளறுபடிகளால் ஆதாயம் அடைந்த கட்சிகள் அதை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்வது போல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை ஆதாரத்தோடு பொதுவெளியிலும், தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடலாம்.  வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பல வாக்காளர்க...

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

Image
  அரசியலைப் பொருத்தவரை எல்லா அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருப்பார்.  பல அரசியல்வாதிகளும் தாங்கள் இருந்த கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிகளுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான்.  அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பொருத்தவரையில் அவர் எம்ஜிஆர் காலம் தொட்டு எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் அதன்பின் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரின் விசுவாசத்தை பார்த்து தான் ஜெயலலிதாவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவரின் முதல்வராக்கி அரசையும் கட்சியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் அதே விசுவாசத்தோடு கண்ணியத்தோடும் மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.  இதனால் அதிமுகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வம் சிறந்த விசுவாசி  என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா கட்சியை கைப்பற்ற நினைத்தபோது அதற்கு எதிராக போர் போடி தூக்கிட்டு தர்மயுத்தம் செய்ததிலிருந்து ஆரம்பித்தது அவரது வீழ்ச்சி.  ஓபிஎஸ்ஐ பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த நிர்வாகி இல்லை என்பது அதிமுக கட்சியின் தொண்டர்களை கணித்தது. அதன...

திமுக அரசு அடிப்படை பிரச்சனைகளையே தீர்க்க முடியாமல் திணறுவது ஏன்?

Image
  திமுக ஆட்சியில் தொடர்ந்து அடிப்படையாக மக்களுக்கு தேவையானவற்றை சரியாக செய்வதில்லை என்று குற்றச்சாட்டு பல மாதங்களாக எழுப்பப்பட்டு வருகிறது.  மற்ற எந்த ஆட்சிகளிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டும் ஏன் இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது என்பதை ஆராய்ந்த போது, திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலைமையைப் பற்றி அறியாமல் தங்கள் வசதிக்கேற்ப வாக்குறுதிகளை அளித்ததன் விளைவு தற்போது மிகுந்த அதிருப்தியில் திமுக அரசு உள்ளது.  அது மட்டுமல்லாது திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் வயது மூப்பின் காரணமாக தங்கள் பணிகளை சரியாக செய்ய முடிவதில்லை என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. மேலும் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களுக்கான நலன்களையும் வருமானத்தையும் பார்ப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.  இந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் பலரும் திமுகவின் தலைமைக்கும் அமைச்சர்களுக்கும் சாதகமாக செயல்படுவ...

காங்கிரஸ் கட்சியின் தொடர் பின்னடைவுகளுக்கு காரணம் என்ன?

Image
  இந்தியாவில் சுதந்திர காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட கட்சி காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்தது.   காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் சக்தி வாய்ந்த நபர்கள் இருந்ததால்  ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வந்தது.  ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அதற்குக் காரணம் அக்கா செயின் தலைமையில் ஒரு ஸ்த்திரதன்மை இல்லை. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின் காங்கிரஸில் சரியான ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. அக்கட்சியை  சரியான வழியில் வழி நடத்த தலைமையில் சரியான ஆள் இல்லாததோடு மட்டுமல்லாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களும் கட்சியை பலப்படுத்தும் நோக்கோடு செயல்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்ததால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் அடிமட்ட தொண்டர்களுடன் சரியான தொடர்பில் இல்லாததோடு மக்களிடமிருந்தும் அன்னியப்பட்டு விட்டனர்.  அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. எ...

உதயநிதிக்கு ஆப்பு அடிப்பது திமுகவினரே தானா?

Image
 தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க கட்சிகளில் ஒன்று திமுக ஆகும். திராவிட சிந்தாந்தத்தை முன்வைத்து அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.  அண்ணாவின் மறைவிற்கு பின் அவருடன் பல மூத்த தலைவர்கள் கட்சி ஆரம்பிக்க உதவியவர்கள் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி திரு கருணாநிதி அவர்கள் இந்தக் கட்சியை கைப்பற்றினார். அன்று முதல் இன்று வரை அவரது குடும்பமே திமுக கட்சி என்று ஆகிவிட்டது.  தற்போது திமுகவின் உதயநிதியை முன்னிறுத்தி கட்சியில் பல பணிகள் நடந்து வருகின்றன. அவர் துணை முதலமைச்சர் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் முதலமைச்சராகவும் வாய்ப்பு வரப்போகிறது  என்கிற செய்திகளும் வந்து கொண்டுள்ளன.  இந்நிலையில் திமுகவில் இருக்கும் சில மூத்த சீனியர் தலைவர்களுக்கும் அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஒரு பகுதியினர் இந்த வாரிசு அரசியலில் சில வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அதற்கு உடன் உள்ளனர் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் மூலமாக தெரிய வந்தது.  இதனால் திமுகவில் உதயநிதியின் செயல்பாடுகள் பற்றி பின் தொடர்ந்து அவர் செய்யும்...

தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது

Image
தமிழ்நாடு எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது.  தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம்,மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டம் என பல பிரிவுகளில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதில் மாநில பாடத்திட்ட மொழிகளில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சிபிஎஸ்சி மற்ற பாடத்திட்டங்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுக்க படிக்கவும் முடியும்.  தற்போது நம் பொதிகை டைம்ஸ் இதழ் சார்பாக சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது.   தமிழ்நாட்டில் படிக்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் பலருக்கும் தமிழை சரியாக எழுத படிக்க கூட தெரியவில்லை என்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் இங்கு சில அரசியல் கட்சிகள் தமிழை வளர்ப்போம், தமிழ் தான் உயிர் மூச்சு என்று வசனம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழ் பயின்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்...