அகங்கார யுத்தத்தின் முடிவு எட்டு உயிர்கள்
தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் நடைபெற்ற இரு தனியார் பேருந்துகளின் விபத்து காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அந்தக் காணொளியை பார்க்கும் பொழுது அரசு விரைவு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த பேருந்து ஒன்று முன்னாள் சென்று கொண்டிருக்கிறது. அதனை தனியார் பேருந்து ஓட்டுநர் முந்த முயற்சிக்கிறார். பலமுறை முயன்றும் அந்த விரைவு போக்குவரத்து கழக பேருந்தின் ஓட்டுநர் வழி கொடுக்காத நிலையில் எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுனர் அகங்காரமும் (Ego) அவரை முந்தவிடக் கூடாது என்று விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டினரின் அகங்காரமும்(ego) இன்று எட்டு உயிர்களை பலி வாங்கியுள்ளது. நமது இந்தியர்களுக்கு பொதுவாகவே சகிப்புத்தன்மை மிக குறைவாக உள்ளது. சாலைகளிலும் பொது இடங்களிலும் முன் பின் தெரியாத நபர்களிடம் போட்டி பொறாமை மனப்பான்மையுடன் அகங்காரத்துடனும் பலரும் நடந்து கொண்டிருக்கின்றனர்.இது மாற வேண்டும். நாம் விட்டுக் கொடுத்து செல்வதால் எந்த விதத்திலும் கெட்டுப் போகப் போவதில்லை. மேலும் மனிதத் தன்மையுடனும் சகிப்புத்தன்மையுடன் நடப்பதால் நமது மதிப்பு உயரும். தற்போதைய ...