இரட்டை வேடம் போடுகிறாரா கனிமொழி?
திமுகவில் உள்ள தலைமை குடும்பத்தில் நிர்வாக திறனும் ஆளுமையும் அரசியல் தந்திரங்களும் அதிகம் தெரிந்த ஒரே தலைவர் என்றால் திருமதி கனிமொழி அவர்கள் மட்டுமே. கனிமொழி அவர்கள் அரசியலில் ஓரளவுக்கு குறைந்தபட்ச நாகரிகத்தை கடைபிடிக்கும் திமுக அரசியல்வாதியாக அறியப்பட்டவர். ஆனால் அவரும் பல தேர்தல்களில் பல பொய்யான வாக்குறுதிகளை அழிக்க காரணமாக இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டின் திமுக அரசின் தேர்தல் அறிக்கை தயாரித்த முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார். திருமதி கனிமொழி அவர்கள் 2016 தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது கட்சி உறுப்பினர்களோ தலைவர்களோ யார் மதுபான ஆலை நடத்தினாலும் அது மூடப்படும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஆவண செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக மக்கள் மதுவால் இருந்ததாகவும் இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது சுங்க கட்டணம் ரத்து கேஸ் சிலிண்டர் ...